இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விளையாட்டாக சொல்கிறேன்#24

புதுப்புது வேடமிட்ட திகதிகளுடன் நேரம் யாருக்காகவும் காத்திருக்க விரும்பாமல் கடந்துகொண்டே போயின, கேள்விகள் மட்டும் எப்பொழுதும் போல, மேப் இல்லா புதையலைப் போல தோண்டும் வரை மனதைவிட்டு வரமாட்டேன் என அடம்பிடித்து அழுந்திப்போய்க் கிடந்தன.. ஒரு பொழுதும் அவனை கல்லூரி கேண்டினில் பார்த்ததில்லை, பதினோறு மணிக்கு அவசரமாய் கடிபடும் சூடான பப்சுடனும் கண்டதில்லை. வேறுபட்டவன்தான், அவன் தனிமை விரும்பி, ஒரு கவிஞனைப் போல, ஒரு புத்தனைப் போல, ஒரு சந்நியாசியைப் போல.. கவிஞன் தனிமையைப் பிழிந்து சொற்களை தேடுவான், நண்பன் வாழ்க்கையைத் தேடினான். புன்னகை பழகாத முகம், மாற்றம்பெறாதா அவனது ஆடைகள், பெயருக்கென ஒரு செருப்பு, தன்னை உடைக்கப்போகிறானோ என அஞ்சி நடுங்கி எழுத்துகளை அவன் எழுதும்பொழுதெல்லாம் பாழாக்கும் அவனது எழுதுகோல், காது அழுக்கை எப்பொழுதுமே சிறிது தாங்கி நிற்கும் அவனது சைக்கிள் சாவி கொத்து, என அவனது அடையாளங்கள் அனைத்துமே ஒரு கவிஞனின் கற்பனைக்கு தீனிபோடவல்ல இயற்கையின் அழகை ஒத்த கருப்பொருட்கள்.  இரண்டாம் ஆண்டு பாதி கடந்திருக்கும், எனக்கேதோ ஒரு திடீர் புத்தி ஒன்று உதித்திருந்தது.. அறிவென்றால் ஆங்கிலம்தானென்ற நம்பிக

விளையாட்டாக சொல்கிறேன்#23

வேளாவேளைக்கு இல்லையென்றாலும், இருவேளை உணவுக்காகவேணும், வேலை கிடைத்ததில் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அதிலும் சிலநாட்களுக்கு ஒரு வேளை உணவை இழக்க நேரிடலாம், அப்பாவின் மருந்து செலவிற்காக! இருந்தென்ன, ஊதியத்தை தாண்டி ஏதேனும் முதலாளி கொடுத்துவிடமாட்டாரா என்ன? அபரிவிதமான நம்பிக்கை அவனுக்கு, முதலாளியின் மீதல்ல, அவனின் உழைப்பின் மீது. 'என்னடா, விடியிறத்துக்கு முன்னயே எந்திரிஞ்சி போயிடுற, அப்படி என்ன வேலன்னு சொல்லிட்டுதான் போயேன்', அம்மா பலமுறை கேட்டும், அவனிடம் சரியான பதிலில்லை.. அதெல்லாம் நல்லவேலதான், வரேன், என்றவன் பேச்சற்று சாய்வு நாற்காலியில் கிடந்த தன் அப்பாவின் காலின் விழுந்து வணங்கி, புறப்படலானான். என்னதான் உதவாக்கரை, பெற்ற பிள்ளையை வளர்க்க தெரியாதவரென ஊர் சொன்னாலும், அப்பாவாயிற்றே! தான் பெற்ற மகனுக்கு தன்னை பிடிப்பதற்கு, தமக்கு சிறப்பு பண்புகள் எதுவும் வேண்டுமா என்ன!  அப்பாவையும், அம்மாவையும் தவிர, வேறு யார் காலிலும், ஏன் கடவுளின் காலிலும் விழுந்தவனில்லை அந்த சிறுவன். யார் சொன்னது சிறுவனென்று, அந்த பெரிய மனிதன்! சரியாக மூன்றரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்ட அவன், திரும

விளையாட்டாக சொல்கிறேன்#22

பசி பற்றி அறிந்திருக்கிறீர்களா நீங்கள். பசி என்றால் வெறுமனே பசியல்ல முழுமையான பசி, வயிற்றை அப்படியே உள்ளிழுக்கும் பசி. பலருக்கும் பல பசிகள் இருந்திருக்க வாய்ப்புண்டு. அறிவுப்பசியில் தொடங்கி வயிற்றுப்பசி வரையில். பசிகளுக்கெல்லாம் அதிபதி வயிற்றுப்பசிதான். கொடிது கொடிது வயிற்றுப்பசி கொடிது! இந்த பசுமைப்புரட்சி வந்த காலத்திற்கு முன்பு பசி பல உயிர்களை உண்டு செரித்திருந்தது. அதற்கு பின்னும் பசி என்ற ஒன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டதா என்றால், இல்லவே இல்லை! பரவலாக இல்லையென்றாலும், ஈவுஇரக்கமற்ற மக்களால், அந்த நோய் பரப்பப்பட்டுக்கொண்டேதான் இருந்தது. இடையூறுகள் சூழ வாழ்ந்த வேளைகளில் அப்பா பல வயிற்றுப் பசிகளை அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன். அது வெறுமனே விரதப் பசியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிற்பாடு இடையூறுகள் கடந்தும் வயிற்றுப்பசியை சில குறிப்பிட்ட நாட்களில் விரும்பி ஏற்றிருந்தார், கடவுள்களின் பெயரால். இப்படி யூகித்திப்பாருங்கள், ஒரு பள்ளிப்படிப்பை தொடரும் சிறுவன், அப்பா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார், அம்மாவால் எந்த வேலைகளும் செய்து பணமீட்ட முடியாத நிலைமை, உறவுகளின் கனிவுப் போர்வை

விளையாட்டாக சொல்கிறேன்#21

சத்தம் எங்கிருந்து வருகிறது என்ற மகனின் கேள்வியிலிருந்து ஒளிபெற்றிருந்தது அன்றைய இரவு. சத்தத்திற்கும் காற்றுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு, காற்றை எந்த வழியில் எப்படி அழுத்தி அனுப்புகிறோமோ, அதைப்பொறுத்தே சத்தம் அமையும் என்பதை விளக்க, ஏற்றுக்கொள்பவனாக இல்லை மகன்! நீ பேசுவதே, காற்றை வேறுபட்ட அழுத்தத்தில் வெளிப்படுத்துவதனால்தான் என்றவுடன், அப்படின்னா காத்து இல்லாத வெளியில் சத்தம் இருக்காதா, என்ற அவனின் கேள்வியில் உரைந்து விட்டேன். இவ்வுலகம் தோன்றியதன் காரணம் ஒரு பெருவெடிப்பெனில், அந்த வேளையில் சத்தம் தோன்றியிருக்காதோ என்றொரு கேள்வி எனக்குள் எழுந்துவிட்டது. அடடா, எப்படிப்பட்ட முட்டாள்தனமான விளக்கம் நான் கொடுத்திருக்கிறேன் என்றவாறு, இரு பொருட்கள் உராய்வினால்தான் சத்தம் ஏற்படுகிறது, அது எந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி உராய்வால் உருவான சத்தம் காற்றின் மூலமோ, காற்றில் உள்ள ஈரப்பதத்தின் மூலமோ பயணித்து நம் காதுகளை அடைகிறது, என்றேன்.  அன்னைக்கு ஒருநாளு புயல் அடிச்சிச்சுல ஓஓஓஓன்னு, அந்த சத்தம் எது எதோட உராஞ்சுச்சுனு வந்துச்சி, என்றவனிடம், காற்று உராய்ந்த சத்தமென்ற ஒற்றை பதிலுடன்

விளையாட்டாக சொல்கிறேன் #20

வீட்டின் பின்புறத்தில் கீற்றால் வேய்ந்த சாய்ப்பில்தான் நீண்ட நாட்களாக சமையல் நடந்தது. சாய்ப்பின் பின்புறம் குறுக்கு கம்புகள் மீது அடுக்கப்பட்டிருந்தன விறகு கட்டைகள். அருகிலேயே, சிலபல தென்னங்கீற்று ஓலைகள், பன மட்டைகள், மண்ணெண்ணை டப்பா, உமி கிண்ணம், சிம்லி விளக்கு என அனைத்து செயலிகளும் இருந்தன. அவைகள் யாவும் எளிதில் தீயை மூட்டுவதற்காக பயன்பட்டவைகள். ஒரு நாள் இரவு எட்டுமணி வாக்கில், ஒருபுறம் எரிந்துகொண்டே மறுபுறம் அழுதுகொண்டிருந்த உடைத்த சீமகருவேல மரக்கட்டைகள் மீது குளிருக்கு இதமாக அமர்ந்திருந்தது தோசைக்கல். அதன் மீது கம்பும், அரிசியும், உளுந்தும் சேர்த்து மைய அரைத்த மாவை, தொசையாக ஊற்றிக்கொண்டிருந்தார் அம்மா. சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும் அந்த தோசைக்கு பூண்டு துவையலோ, பூண்டு பொடியோதான் சரியான ஜோடியாக இருக்க முடியும். அம்மியில் ஐந்தாறு பூண்டு பற்களையும், நல்லெண்ணெயில் வறுத்த இரண்டு மிளகாயும், உப்பு சிறிதளவு வைத்து அரைக்க தயாராகிவிடும், காரசாரமான பூண்டு துவையல். சண்டைபோட்டு வாங்கிய குழித்தட்டில், தோசையை வைத்து, ஒரு குழியில் பூண்டுதுவையலில் வீட்டு நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிட, ஒரு ஒன்பது ம

விளையாட்டாக சொல்கிறேன் #19

ஏதோ ஒரு கடிதம் வந்ததாக அப்பா சிரித்துக்கொண்டே என்னிடம் கொடுத்தார். யார் வேண்டுமானாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு திறந்தே இருக்கும் மஞ்சள் நிற சிறு காகிதத்தில், ஒரு பக்கத்தின் வலது மூலையில், சிரித்துக்கொண்டே இருந்த காந்தித்தாத்தாவின் கீழே, என்பெயரிட்டு முகவரி எழுதப்பட்டிருந்தது. அதே பக்கத்தின் மறுமுனையில் கீழே அனுப்பியவர் முகவரியுடன், மேலே நீண்டிருந்தது முதல்பக்க எழுத்துகளின் தொடர்ச்சி. 'அன்புள்ள ஜிஎஸ் க்கு, அன்புடன் எஸ்எஸ்பி எழுதிக்கொண்டது, நலம் நலமறிய ஆவல். ஜிஎஸ்பி கடிதம் எழுதினானா, விடுமுறை எப்படி கழிகிறது', என நீண்டுகொண்டே போன சொற்கள், அன்புடன் எஸ்எஸ்பி என்று முடிந்திருந்தது. நான் படிக்க படிக்க, பின்னணி இசை போல சிரித்துக்கொண்டே இருந்தார் பெரியண்ணன். அவர் முன்பே அந்த கடிதத்தை படித்துவிட்டார் போல. அனைத்து பெயர்களுமே இனிசியலாக மட்டுமே குறிப்பிடப்பட்டதை நினைத்து சிரித்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனால், ரிமோட்டிலிருந்து பாய்ந்து செல்லும் கண்ணிற்கே புலப்படாத அந்த அகச்சிவப்பு கதிரை, தொலைக்காட்சி பெட்டி மட்டும் கண்டுகொள்வதைப்போல, அந்த கடிதத்துள் பதுக்கப்பட்டிருந்த நண்பனின் அன்ப

விளையாட்டாக சொல்கிறேன் #18

வாழ்கையை ஒரு பயணமாகத்தான் பெரும்பாலும் உருவகித்துக்கொள்கிறோம் காரணம், நேரமென்ற நான்காது பரிமாணத்தை நம்மின் முப்பரிமாண காட்சிகள் கடந்துசெல்வதால்தான். ஆனால் நம் வாழ்வு, அந்த நான்காவது பரிமாணத்தில் முன்னோக்கி மட்டுமே செல்லப் பழக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னோக்கி பாய்ந்து செல்லும் ஒரு தொடர்வண்டியைப்போல. அந்த வாழ்வென்ற தொடர்வண்டியின் கடைசிப்பெட்டியில் பயணப்படுவதுதான் நம்மின் நினைவுகள். அது முன்னோக்கி செல்லும் தொடர்வண்டியுடனேயே இணைந்திருந்தாலும், பின் கடந்துவந்த பாதையையும் பார்த்துக்கொண்டேதான் வரும். வாழ்வை தாங்கி நகர்த்திசெல்லும் நேரமென்ற இரும்பு பாதையை அசையாது தாங்கி நிற்கும் அன்பென்ற சிறுகற்கள் பாதைநெடுகிலும் இறைந்து கிடக்குமே, அந்த அன்பு செலுத்தியவர்கள் பலராலும் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த வாழ்வென்ற பயணம். பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த அந்த சிறுவனான என்னை அடித்தவண்ணம் தரதரவென கப்பி சாலையில் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார் அப்பா. சிங்கபூரிலிருந்த வந்திருந்த மாடிவீட்டு தாத்தாதான், கடவுளாக என்னைக் காத்து பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார். பல நாட்களாக பள்ளிக்கு செல்லவே கசந்த நிலையி

விளையாட்டாக சொல்கிறேன் #17

பழைய மரத்தாலான கேன்வாஸ் ரக சாய்வு நாற்காலி ஒன்றில் கால் மீது கால் போட்டு, நடு வகுடெடுத்த தலையில் வெள்ளி இழைகள் முட்டிமோதி மேலெழுந்து அசைந்துகொண்டிருக்க, வலது கை கடிகாரம் ஆடும் படி கையை அசைத்து அசைத்து எதையோ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, கீற்று மட்டைகள் வேய்ந்த மாடியில், தென்னங்காற்றில் கரைந்துகொண்டே இந்த காட்சிகள் நடந்திருக்கலாம் என அவதானிக்கிறேன். அவரின் பேச்சின் இடையே, அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை அவரின் நண்பர்கள் பெரிதாக கவனித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் அமர்ந்திருந்த அந்த சாய்வு நாற்காலி அவரைப்பற்றி நினைவுகளை உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. 'பெரும்பாலும் உங்க தாத்தா, கேன்வாசுலதான் தூங்குவார், அப்படி தூங்கயில நாய் கட்டிலுல தூங்கும், தாத்தா கட்டிலுல தூங்குனார்னா, நாய் கேன்வாசுல படுத்திருக்கும்' என்று வடக்கு வீட்டு பெரிய அண்ணன், அந்த கேன்வாசிற்கும், தாத்தாவிற்கும் இடையே நாயின் அன்பு எப்படி பரவிக்கிடந்தது என்பதை பலதடவை சொல்லியிருக்கிறார். எத்தனை திருமண பேச்சுகளையும், சொத்து தகராற

விளையாட்டாக சொல்கிறேன் #16

நரிகள் ஊளையிடும் சத்தம் காதை பிளந்துகொண்டிருந்தது. தினம்தினம் ஆடுகளையோ, கோழிகளையோ இழப்பதே மக்களின் பெரும் இடையூறுகளாக இருந்தன. மனிதனின் மூதாதையர்களான குரங்குகள் பல இன்றும் குரங்குகளாக இருப்பது போலவே, நாய்களின் மூதாதையர்களான நரிகள் அப்படியே கொடுங்குணத்துடந்தான் இருக்கின்றன. பொழுதுபோக்கிற்காகவே வேட்டையாடும் அந்த கொடிய நரிகளை, உலக சமூகத்தில் மங்கோலியர்கள் மட்டுமே தன் குலச்சின்னமாக தொழுதனர் என்பதை பிற்பாடு ஓநாய்குலச்சின்னம் (wolf totem in english written by Jiang Rong, தமிழில் சி. மோகன்) புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொண்டேன். காரணம், அவைகள் மங்கோலியாவின் 'புல்வெளி பகுதிகளை', புற்களை உண்டு வாழும் முயல்கள், மான்களிடமிருந்து காக்கின்றன என்பதுதான். ஆனால் அதில் மற்றுமொரு பயனும் இருந்திருந்தது அந்த மஞ்சள் நிற மங்கோலியர்களுக்கு. இந்த உலகத்தையே ஆட்சி செய்த மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான், போர்முறை தந்திரங்களை இந்த ஓநாய்களிடம்தான் கற்றிருந்தார். அதனால்தான் இந்த உலகத்தையே வென்றிருக்க முடிந்தது செங்கிஸ்கானால். இயற்கையாக படைக்கப்பட்ட எதுவும் எதோவொரு வகையில் மனிதனுக்கு பயனுள்ளவைகளாகவே இருக்கின

விளையாட்டாக சொல்கிறேன் #15

வாழ்க்கை முழுவதுமான நினைவுகளை எடுத்து சல்லடை கொண்டு சலித்தால், பெரும்பாலும் சல்லடையில் எஞ்சும் பெரும் நினைவுகளாக நிற்பது நாம் மேற்கொண்ட பயணங்கள் தான். மனிதன் தன் கடைசிப் பயணத்தை தவிர மற்ற அனைத்தையும், வேடிக்கையுடன், ரசித்துக்கொண்டேதான் பயணிக்கிறான். பயணங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரை விளம்பர இடைவேளை இன்றி, ஒரேயடியாக பார்ப்பதுபோலொரு உணர்வை கொடுக்கவல்லது. அந்த தொடரை காண்பிக்கும் சாளரம், பேருந்தின் சன்னலின் அளவுடையதாகவோ, உந்துருளி பின் இருக்கையிலிருந்து பார்க்க முடிந்த 180 டிகிரி அளவுடையதாகவோ, ஒருசிலருக்கு மகிழுந்தின் சன்னல் அளவுடையதாகவோ இருக்கலாம். பல வேளைகளில், திரையை மறைக்கும் விதமாக, நமக்கு முன்பே வந்து சன்னலோர இருக்கையை பிடிக்க ஒருவர் தயாராக இருக்கலாம். இருந்தும் எக்கி பார்த்த காட்சிகள் நீங்கா நினைவுகளுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எங்கோ, ஏதோவொரு பயணத்தில் பார்த்த துள்ளியாடும் ஆட்டு குட்டிகளை பார்த்து மனம் துள்ளிக் குதித்திருக்கும், என்றோ சாளரம் வழி கண்டிருந்த சிறு சண்டை சச்சரவுகள் நம்மை பாதித்திருக்கும். நானா அவனா ஒரு பங்குடு பண்ணிட்டு வரேனென பயணப்பட்டவர்கள், பயண

விளையாட்டாக சொல்கிறேன் #14

எங்கோ கேட்ட குரல் அது, சற்றே உரக்க கேட்கிறது. 'அய்யோ கொடும்பாவி, ஆகாச சக்களாத்தி, சுக்கீரம் பொண்டாட்டி, சுக்கீரன விட்டுடடி' என்ற அந்த ஒப்பாரி, பாப்புவின் குரல்தான். உண்மையில் ஒரு ஒப்பாரிப்பாடல், மனிதனின் மனதை மாற்றவல்லது, துக்கத்தையும் எளிதில் கடக்க துணைபுரிவது. கையறுநிலையை பாடலாக வடித்து இசைப்பது என்பது ஒரு பெரிய இலக்கிய வடிவம். பாரியின் இறப்பையும், அதியமானின் இறப்பையும் விளக்கும் சங்க இலக்கியங்கள், கையறுநிலை பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட ஒப்பாரியை உலகளவில் எடுத்துச்செல்ல நம்மவர்கள் தவறிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  மழை வேண்டி கொடும்பாவி எரிப்பது கிராமங்களில் வழக்கமான ஒன்றுதான். பாப்புவின் குரலைத்தான் பெரும்பாலான வேளைகளில் கொடும்பாவி கேட்டுக்கொண்டே எரிந்து மகிழும். மூளை சுருக்கங்களை ஒத்த தோல்கள், மேலாடை அணியாது, கைத்தறி புடவையால் மறைக்கப்பட்ட உடல், இடுப்பு சுருக்கு பை, கனிவான சொற்கள், அளவில்லா அன்பு என தனிப்பெரும் அடையாளம் கொண்ட பாப்பு ஒரு அமைதிக்கான நோபெல் பரிசுக்கு தகுதிபெற்றவர். பாப்புவிற்கு உழவன் மீதும், உழவு மீதும் அவ்வளவு பற்று. உழவின் மீது உழவனுக்க

விளையாட்டாக சொல்கிறேன் #13

'என்னங்கிறேன் நிக்கிற, உக்காரவேண்டிதானே, நீயே பேர புள்ளைகள எடுத்தப்புறமுமா எனக்கு மரியாத குடுப்ப, எல்லாம் மனசில இருந்தா போதுங்கிறேன்!' என எப்பொழுதுமே என் அப்பாவிடமும், பெரியப்பா, சித்தப்பாக்களிடமும் என் தாத்தா கேட்பது வாடிக்கை. சனி மூலையில் திரண்டு வரும் மேகம் கூட சிலவேளைகளில் மழையாக மாறாமல் காற்றுடன் சலனப்பட்டு களைந்து சென்றுவிடலாம், ஆனால் அப்பாவோ, அப்பாவின் உடன்பிறப்புகளோ என்றுமே தாத்தாவின் முன்பு இருக்கையில் அமர்ந்ததாக சரித்திரமில்லை. தாத்தா ஒரு வாழ்க்கை நெறி தெரிந்த ஒரு வித்தைக்காரர். முயற்சியால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிட முடியாது, கூடவே சிக்கனமும் தேவை என்பதை உணர்ந்தவர். அவரின் தந்தை தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து ஒன்றுமில்லாமல் குடும்பத்தை இவரிடம் ஒப்படைத்த நேரத்தில், வாரத்திற்கு நிலத்தைப் பிடித்து, தம் மகன்கள் அனைவரையும் வரிசைகட்டி ஏர்பிடிக்க வைத்து, சிறிது சிறிதாகத்தான் சொத்தை சேர்த்திருக்கிறார். என் அப்பாவுக்கு முன் இருவரையும், அவருக்கு பின் ஐவரையும் பெற்ற இரும்புப்பெண்மணியான பாட்டி ஒருநாள் இறந்துவிடவே, அத்தை ஒருவரைத்தவிர பெண் என்று வீட்டில் யாருமில்லாத சூழ

விளையாட்டாக சொல்கிறேன் #12

காலை நான்கு மணி இருக்கும், கூட்டமாக தூங்கிக்கொண்டிருக்கும் எங்களை, ஏதோவொரு கனத்த குரல் தட்டித் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கத்துடன் விழிகள் திறந்தும் நோக்காத கண்களுடன், காலைக் கடமைகளை வலுக்கட்டாயமாக செய்துவிட்டு, முழுக்கை வெள்ளை சட்டையை முட்டிக்கை தாண்டி மடித்து, இடுப்பில் நிற்காத காக்கி அரைக்கால் டவுசரை பட்டையான பெல்ட் கொண்டு முடிந்துகொண்டு, தலையில் நிற்காத அந்த குல்லாவை பிடித்துக்கொண்டே, இரண்டு கிலோமீட்டர் மூங்கில் தடி கையிலேந்தி ஓடிக்கொண்டிருந்தோம். புத்தர் விரும்பியதுபோல் அமைதி வடிவில் மனிதனைக் காணவேண்டுமானால், மனிதனின் சிலையை மட்டும்தான் காணமுடியும். அப்படி ஆரஞ்சு நிறத்தில் அமைதியாய் நின்றிருந்த விவேகானந்தர் சிலை முன்பு நீண்டிருந்த மைதானத்தில், அந்த மூங்கில் கம்பை முன்னும் பின்னும் சுற்றி பின் பல உடற்பயிற்சிகளை உடற்பெயர்ச்சி இல்லாது செய்துவிட்டு, காலை வெயில் கண்ணை எட்டியதும் வேதாரண்யம் கோயிலுக்கு கால் நடையாக சென்றிருந்தோம். கோயில் சுற்றுப்பாதையில் நாமாக எந்த குப்பையும் இடாது, இருக்கும் குப்பைகளை சுத்தப்படுத்தி சுவச் பாரத்தாக்கிவிட்ட பெருமிதப்புடன் கோயில் தளத்திற்குள

விளையாட்டாக சொல்கிறேன் #11

கிராமங்களின் பின்புலம் கொண்ட, என் வயதொத்த எவருக்கும், தோசை விளையாட்டை ஆடிய அனுபவம் இருக்கும். அதில், அனைவரும் வட்டமாக அமர்ந்து, தரையில் புறங்கை படுமாறு வைத்திருக்க, ஒருவர் மட்டும் தீமூட்டி, தோச கல்லு வையி, எண்ண தீத்து, தோச ஊத்து என வெர்ச்சுவல் ரியாலிட்டியில் தோசை ஊத்தி முடிப்பார். பின், ஊத்தியவர் 'வெந்துச்சா வேகலையா' என கையை கிள்ளி கேட்க, அனைவரும் 'வேகலை' என பதிலளிப்பார்கள்.. அடுத்தமுறை மீண்டும் கேட்க, 'வெந்துடுச்சி' என பதிலளிக்க, அனைத்து தோசைகளையும் அடுக்கி வைப்பதுபோல் பாவனை காண்பித்துவிட்டு, அந்த தோசை ஊற்றியவர் குளிக்க போறேன் எனக் கூறி, திரும்பி பார்த்துவிட்டு உட்கார்வார்.. ஆனால் அங்கு தோசை எதுவும் இருக்காது. அதைக் கண்டு அதிர்ந்து போகும் அவர், மற்றவர்களிடன் இப்படித்தான் கலந்துரையாடுவார், தோசை எங்கே?  காக்கா தூக்கிட்டு போச்சி, தூக்கிட்டு போன காக்கா எங்கே? கெளையில உக்காந்துருக்கு உக்காந்த கெளை எங்கே? மரத்துல இருக்கு அந்த மரமெங்கே? வெட்டி வெறகாக்கியாச்சி வெட்டுன வெறகெங்கே? அடுப்பெரிச்சாச்சி அடுப்பெரிச்ச சாம்பலெங்கே? பாத்திரம் கழுவியாச்சி கழுவுன தண்ணி எங்கே? மாட்ட

விளையாட்டாக சொல்கிறேன் #10

ஒரு இரண்டடி நீளம் கொண்ட கம்பை கொண்டு, இருபுறமும் கூர்மையாக்கப்பட்ட ஒரு ஜான் அளவுள்ள சுறு குச்சியை அடித்து விளையாடுவதுதான் அந்த கிரிக்கெட்டின் முன்னோடியான கிட்டிபுள்ளு. பல ஊர்களிலும் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டென்றே மதிப்பிடலாம். ஏனென்றால் விளையாடும் யாருக்குவேண்டுமானாலும் அடிபட நேரிடலாம், மைதானத்தில் கிடைக்கவில்லை என்றாலும் வீட்டில் கட்டாயம் கிடைக்கும்! கிட்டிபுள்ளு பல மாதிரிகளாக விளையாடப்பட்டாலும், எங்கள் பகுதியில் விளையாடப்படுவது இந்த வகைதான். ஒரு சிறு குழி தோண்டி, அதன் குறுக்கில் முதலில் அந்த கூர்மையாக்கப்பட்ட புள்ளை வைத்து, எதிர் வீரர்கள் நிற்கும் திசைக்கு எதிர் திசையாக திரும்பி, முகம் முட்டியை தொடும் வண்ணம் குனிந்து, கிட்டியை வைத்து ஆளில்லா பக்கம் நெம்ப வேண்டும். உந்தப்பட்ட புள்ளை யாரும் பிடித்துவிட்டால், ஆடியவர் அவுட், இல்லை என்றால், எங்கேனும் கீழ்விழுந்திருக்கும் புள்ளை எடுத்து எங்கிருந்து வந்ததோ அந்த இடம் நோக்கி எறிய வேண்டும். நெம்பியவர், கிட்டியை கையில் வைத்துக்கொண்டு ஷேவாக் போல கண்ணை மூடிக்கொண்டு எதிர் வரும் புள்ளை அடிப்பார். அது அடிபடாமல் அந்த க