உலக மக்களுக்கு சோறிட சேற்றில் இறங்கும் விவசாயியின் தற்கொலை எதை உணர்த்துகிறது நமக்கு.... ?-ஒரு சாதாரணனின் பார்வையில்..
இதுவரை ஆட்சி செய்த அல்லது இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அரசின், விவசாயியின் மீதான அக்கறை என்ன..?! ஆந்திர மாநிலத்தில், விவாசாயி ஒருவர், தன் மகன் பயிலும் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அங்கு படித்துக்கொண்டிருந்த தனது மகனை அழைத்து சென்று ஒரு தேநீரும், ரொட்டியும் வாங்கிக் கொடுத்து உண்ணசொல்லிவிட்டு, அவன் கையில் ஐந்து ரூபாயையும் கொடுத்திருக்கிறார். பின் அவனை, அந்த பள்ளியிலேயே விட்டுவிட்டு, அவனிடம் நன்றாக படிக்கவேண்டும் என அறிவுரை கூறிய அவர், எக்காரணம் கொண்டும் நான் இதுவரை செய்துகொண்டிருந்த 'விவசாய' தொழிலுக்கு வந்துவிடாதே என்று தன் விரக்தியை மகனிடம் புலம்பியிருக்கிறார். கடைசியில் அவர் தன் வீட்டிற்கு சென்று தன்னையே கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை, நம் மூளைக்கு எந்த புரிதலை கொடுக்கிறது. அரசின் மோசமான கொள்கைகளும், கொள்ளைகளுமா? அரசு என்ன செய்தாலும், அவர்களுக்காய் கொடிபிடிக்கும் அப்பாவி மக்களை பற்றியா? அடுத்து ஐந்து வருடங்கள் அவர்கள் செய்யப்போகும் கொள்கை பிடிப்பான கொள்ளைகளுக்காய், ஓட்டுக்கு பணம்பெருபவர்களைப் பற்றியா? நடிகர், நடிகைகளுக்காய் கால்கடுக்க நின்று பேட்டி எடுக்