விளையாட்டாக சொல்கிறேன் #5
கடந்தகால நினைவுகளை பெரும்பாலும் சேமித்து வைப்பதில் சிறந்தது மணம்தான். நம் மூளையிலிருந்து, வாய்ச்சொற்களாக சட்டென மாற்றம்பெறாத, அதாவது சொல்லமுடியாத பெயர்களை, 'ஆமாங்க நல்ல பேருங்க அது, தொண்டையில இருக்கு, ஆனா வாயில வரமாட்டேங்குது' என்று ஞாபகத்திற்கு வரா பெயர்கள் அனைத்தும் நல்ல பெயர்கள் என்று சொல்வது நமது பொது வழக்கம். அப்படி ஞாபகத்திற்கு வராமல் மூளைக்குள் ஒரு மடிப்பினுள் புதையுண்டு உயிரற்றதுபோல் கிடக்கும், வாழ்க்கையில் நடந்த ஏதோவொரு சுவாரசியமான நிகழ்வை, உயிர்பெறவைக்க நல்ல நறுமணம் போதுமானது. அப்படி எங்கு எனக்கு விக்கோ பற்பொடியின் மணமோ, மைசூர் சேண்டல் சோப்பின் மணமும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் விளம்பர இடைவெளியில்லாது மாங்குடி கிராமத்தின் படம் ஓடிக்கொண்டே இருக்கும் என் மனதுள். வெறும் புழுதி மணலும், உப்பங்காற்றும் நிறைந்த வெளியினூடே காற்றை உறிஞ்ச பழக்கப்பட்ட என்னுடைய மூக்கிற்கு இதமான ஒரு மணத்தை காண்பித்துக் கொடுத்தது மாங்குடி கிராமம். அந்த ஊர் என்னுடைய இரண்டாவது வீடு என்ற அளவிற்கு பரிச்சயமானது. ஏப்ரல், மே மாதங்களில் அந்த ஊருக்கு அழைத்து போகாவிட்டால் என் மூக்கின் சாபத்திற்கு எங்கள் ஊர்