இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிராமத்து கதைகள் #1

மார்கழி மாத மூடுபனியின் கடுங்குளிரினிலே பயன்படுத்தப்பட்ட உரசாக்குகளின் கைகோர்ப்பிலுருவான மெல்லிய திரையினால் அலங்கரிக்கப்பட்ட சாணம் மொழுகிய திண்ணையிலே நெல் மூட்டைகளை கட்டிலாக்கி நானும் அண்ணன்களும் நாள்முழுதைய கதையுடன் உலக வரலாற்றையும் கூரை வேய்ந்த மோட்டுவளையிடம் பகிர்ந்துகொண்டே உறக்கத்திலாழ்வோம் பெரியப்பாவின்  உரத்த குரட்டையினூடே! அனைவரையும் சற்றும் பாகுபாடின்றி மயக்கியிருக்கும் அம்மோட்டுவளை! இன்று அவ்வினிய நேரம் வாய்ப்பதில்லை! அன்று இவ்வினிய ஞாபகம் நிலைத்திருக்குமென நினைத்ததில்லை! #கிராமத்துக்கதைகள்

துரோகியின் தேவை

இங்கே சிதறிக் கிடக்கும் ஒத்தக் கொள்கைகளுடையோரை ஒன்றுபடுத்தி ஒரே எண்ண ஓட்டத்தில் ஆற்றலுடன் செயல்படவைக்க பலநேரங்களில் திறனுள்ள எதிரிகளும் சிலநேரங்களில் துரோகிகளும் இன்றியமையாத் தேவை! தற்பொழுது தமிழர்களுக்கு சுசாக்களும், கட்ஜூக்களும், பாஜகவும் கட்டாயம் தேவை!

கனாஒளி

ஒரு வயதே வேறுபாடு கொண்ட அண்ணன்-தங்கை வீடொன்றில் அண்ணன் பென்ஸ் காரை எடுக்க தங்கையோ கதவை திறக்கிறாள் அவ்வண்ணன் தங்கையை நோக்கி 'செக்யூரிட்டி கதவை ஒழுங்காய் மூடிவிடென' மூக்கடைத்த ஒலியில் ஒலித்து அக்காரெனப்படுவதின் பெடலை மூர்க்கமாய் அழுத்தினான்! கனவென்பது காண்பவருக்கு மட்டுமன்றி அக்கனா காண்பவரின் மனதை புரிந்தவருக்கும் கா ணொளியாய் விரிகிறது அக்காரை ஓட்டும் அண்ணனின் காட்சி!