இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் சத்தமாய் அழவேண்டும்

நான் சத்தமாய் அழவேண்டும் என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும், சாதிய வன்மத்தில் மாய்ந்துபோன என் உடன்பிறவா சகோதரர்களுக்காய் அழவேண்டும், கொடியவர்களின் காம இச்சைக்காய் மறைந்து போன என் உடன்பிறவா சகோதரிகளுக்காய் அழவேண்டும், மனிதனை மடையனாக்கிய மதத்திடம், அறியாமல் அடிமைப்பட்ட- என்மின உறவுகளுக்காய் அழவேண்டும், கலாச்சாரம், கலாச்சாரம் என்றுசொல்லி அறிவியலை எட்டிநின்றும் அனுபவிக்கமுடியா என் முன்னவர்களுக்காய் அழவேண்டும், ஆம், நான் சத்தமாய் அழவேண்டும்...! என் வயது ஐந்தானாலும், பத்தானாலும் என் முன்னவன் எனக்கிட்ட சாதிய போர்வையால், ‘என்னை மரியாதையாய் கூப்பிட்ட பாப்புவையும், பாளையனையும் இன்ன பிறவர்களையும் மறியாதையற்று கூப்பிட்ட என் சிறுவயது மடமையை நினைத்து நான் சத்தமாய் அழவேண்டும்...!’ அய்யகோ.... நான் சத்தமாய் அழவேண்டும்...! என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும்..! என்னை மன்னியுங்கள், அம்மா பாப்புவும், அய்யா பாளையனும், என்னை மன்னியுங்கள்...! இம்மூடச்சமூகத்தினூடே பிறந்த நாம் ஒவ்வொருவரும் அழவேண்டியவர்களே..!

இலவசம் மறு தமிழா…!!

இங்கு எல்லாம் இலவசம்..! இயற்கை கொடுக்கும் காற்றென்று இனிமையாய் இழுத்தோமென்றால்- பெயர்தெரியா நோய்கள் பல இலவசம்…! உயிர்கொள்ளும் நோய்வரின் நொந்துபோய், மருத்துவமனையில் தஞ்சமடைந்தால்- பஞ்சமான பணப்பையுடன் சேர்த்து, சாவும் இலவசம்..! இங்கு எல்லாம் இலவசம்..! பசியென்றொன்று பல்லிலித்தாலும் வாய்திறந்து பொங்கரிசி இட்டுவிடாதீர், பின், திறந்தவாய் வழி, பொங்கரிசியினூடே உட்சென்ற எமனிடமிருந்து வாய்க்கரிசி இலவசமாய்க் கிட்டும்…! சோறு பொங்க காசு இல்லையென்றாலும் உதவியென்று உற்ற நண்பனிடமும் கேட்டுவிடாதீர் இலவச புத்திமதி இனிதே கிடைக்கப்பெறும்…! உண்மைக் காதல் மையங்கொள்ளினும் மாற்று சாதியை கைபிடிக்காதீர்- காதல் கொலைக்கு நம் பிணங்கள் இலவசம்..! கடவுளையும் விமர்சியுங்கள் மறந்தும் கடவுள் துதிபாடும் மூடனை விமர்சித்தால்- ஆண்மையில்லா ஆளுமையிடமிருந்து மிரட்டல் உறுதியாய் இலவசம்..! இங்கு எங்கு செல்லினும் இலவசம், எதற்கும் இலவசம்…! மனிதமற்றுபோன மதத்திற்கு மூளையற்றுபோன மனிதன் இலவசம்..! மூளையற்றுபோன மனிதனுக்கு நோய்வாய்ப்பட்ட சாதிகள் இலவசம்..! கேட்பாரற்றுபோன தமிழனிற்கோ நாலாபுறமிருந்தும் நயவஞ்

தமிழ்ப்’பா’..! இல்லை, எல்லாம் தமிழப்பா...!!

படம்

கொரியர்களின் தற்பொழுதைய நிலையும், அதன் மீதான அவர்களின் புரிதலும்.....

கடந்த சனிக்கிழமையன்று (11/10/2014) , ஒரு கொரிய வேதியியல் பேராசிரியருடன் உரையாடியபடி மதிய உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது . அவருடன் பேசுகையில் , ஒரு மாறுபட்ட கொரிய சிந்தனையாளாராக எனக்கு அவர் தோன்றினார் . என்னுடைய இந்த இரண்டாண்டு கொரிய அனுபவங்களில் , இதுதான் முதல் முறை , இப்படிப்பட்ட எண்ணவோட்டமுடைய கொரியரை சந்திப்பது . பொதுவாக கொரியர்களின் எண்ணம் , பொருளாதாரம் ஈட்டுதல் பற்றியே இருக்குமே தவிர , அரசியல் பற்றியோ , உலக நடப்பு பற்றியோ கவலையற்றவர்களாகவே இருப்பார்கள் . கூடவே கண்மூடித்தனமான அமெரிக்க சார்புள்ளவர்களாக தங்களை காண்பித்துக்கொள்வதில் அலாதி மகிழ்ச்சி அவர்களுக்கு . இருக்கட்டும் , நான் செய்திக்கு வருகிறேன் . நான் குறிப்பிடும் பேராசிரியர் , சுகாட்லாந்து நாட்டில் தன்னுடைய ஆய்வுப்பணியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் , பின் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் முதுமுனைவு ஆய்வுப்பணியை மேற்கொண்டு பின் கொரியாவில் , சாங்வான் பல்கலைகழகத்தில் பேராசிரியராய் தம் ஆய்வுப்பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார் . இவரிடம் பொது

உலக மக்களுக்கு சோறிட சேற்றில் இறங்கும் விவசாயியின் தற்கொலை எதை உணர்த்துகிறது நமக்கு.... ?-ஒரு சாதாரணனின் பார்வையில்..

இதுவரை ஆட்சி செய்த அல்லது இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அரசின், விவசாயியின் மீதான அக்கறை என்ன..?! ஆந்திர மாநிலத்தில், விவாசாயி ஒருவர், தன் மகன் பயிலும் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அங்கு படித்துக்கொண்டிருந்த தனது மகனை அழைத்து சென்று ஒரு தேநீரும், ரொட்டியும் வாங்கிக் கொடுத்து உண்ணசொல்லிவிட்டு, அவன் கையில் ஐந்து ரூபாயையும் கொடுத்திருக்கிறார். பின் அவனை, அந்த பள்ளியிலேயே விட்டுவிட்டு, அவனிடம் நன்றாக படிக்கவேண்டும் என அறிவுரை கூறிய அவர், எக்காரணம் கொண்டும் நான் இதுவரை செய்துகொண்டிருந்த 'விவசாய' தொழிலுக்கு வந்துவிடாதே என்று தன் விரக்தியை மகனிடம் புலம்பியிருக்கிறார். கடைசியில் அவர் தன் வீட்டிற்கு சென்று தன்னையே கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை, நம் மூளைக்கு எந்த புரிதலை கொடுக்கிறது.  அரசின் மோசமான கொள்கைகளும், கொள்ளைகளுமா? அரசு என்ன செய்தாலும், அவர்களுக்காய் கொடிபிடிக்கும் அப்பாவி மக்களை பற்றியா? அடுத்து ஐந்து வருடங்கள் அவர்கள் செய்யப்போகும் கொள்கை பிடிப்பான கொள்ளைகளுக்காய், ஓட்டுக்கு பணம்பெருபவர்களைப் பற்றியா? நடிகர், நடிகைகளுக்காய் கால்கடுக்க நின்று பேட்டி எடுக்
மலையாளம்- உயிர்நாடி 'தாய் தமிழ்' வழியமைந்த  திராவிட மொழிகளுல்- 'பிரிந்துசென்ற பிராந்திய மொழியாயினும்', உயர்வான, இனிமையான மொழிதான்... ஆனால் தன் தாய்-யை  மறந்தவொரு  மொழியாய்  மாறிப்போனது, காலத்தின் கட்டாயமோ- இல்லை  அரசியலின் சூழ்ச்சியோ  தெரியாது அவர்களுக்கும்...! கட்டற்ற களஞ்சியமாய் வார்த்தைகள்  தமிழெங்கும் கொட்டிக்கிடக்க, இவர்கள் சமஷ்கிருதம்  போவதன் நோக்கம்  தெரியாது அவர்களுக்கும்....! தமிழ் மறந்த அவர்கள், அவர்களுக்கு படியளக்கும்  தமிழர்களையும்  மறக்க-  இல்லை, இல்லை  அடக்க நினைக்கிறார்கள்...! உங்கள் தகதகக்கும் தேநீரும்,  பளபளக்கும் தங்கமும் பொலபொல புட்டும்  விற்பனையாக  தமிழர்கள் வேண்டும், அன்றாட காய்கறிகள்,  உணவுபொருட்கள்  தமிழகத்திலிருந்து வேண்டும், மின்சாரமும் வேண்டும்...! ஆனால் தமிழன் மட்டும் வேண்டாம்!!??? முல்லை பெரியாற்றை,  நீதிமன்றம் சொன்னாலும் விடமாட்டீர்கள்...!??! இதற்கெல்லாம் காரணம்,  தமிழகத்தில் வாழும் மலையாளி மலையாளியாகவே வாழ்வதும், தமிழன் எங்கு சென்றாலும்  தமிழை மறுப்பதும் தான்... எனில்  இப்பொழுதும் தமிழர்கள் என்ன செய்