இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
மாடு கூறும் நல்லுலகு  கெடச்ச புல்ல   மேஞ்சிகிட்டு  கெடச்ச எடத்துல   சாஞ்சிபுட்டு  கெடச்சமுட்டும்  தண்ணிய குடிச்சுபுட்டு  என்னிய முதல்ல   புடிச்ச பயலுக்கு  வயலுல  வேலையும்  செஞ்சு கொடுப்பேன்  கூலியில்லாம...! இப்ப  அவன் என்னிய  சொந்தமாக்கி  தின்னுவைக்க  வைக்கோலுன்னு  ஒன்ன கொடுக்குறான்... அதில் ஒர (உரம்)  நாத்தம்    நல்லா அடிக்குதே தவிர  நல்ல உணவு வாசம்  கிட்டல.... உண்ணவும் முடியல  முக்கி முக்கி  முழுங்கினாலும்  அசபோடவும்   முடியல...! பண்பாடு, கலாச்சாரமெனமுரைக்கும்  அதிமேதாவிக   இனியாவது  ஒரத்த கொட்டி  மண்ணையு என்னையு  சாகடிக்காது நம்ம குலசாமி   நம்மாழ்வார்  சொன்னபடி சாகுபடிய இயற்கையா  செஞ்சு  அந்த வைக்கோல   என் தொழுவத்துல  கொண்டு சேத்தின்னா .. உனக்கு கோடான, கோடி  வருசம் என் இனமே  கூலியில்லாம  வேலை செய்யும் ....! இல்லைனா  நம்ம அழிவு  முன்ன பின்ன  இருக்குமே தவிர  அழிவ  தவிர்க்க முடியாது  உன் வடநாட்டு  கடவுள் வந்தாலும்...!
படம்
என் மொழி உறைந்து கிடந்த  'ice age' உலகில்  உரையாடல் நடக்க  இயற்கை கொடுத்த மொழி  என் மொழி! அக-புற உணர்வு  காம காரியத்திற்கும்,  அதன் பலன் இனவிருத்திக்கும்  என்றெண்ணிய உலகிற்கு  வாழ்வியலை  கற்றுக்கொடுத்தது  என் மொழி! காதலை  உரைத்தால்  கல்லையும் உயிர்ப்பிக்கும்  வல்லமையுண்டு   என் மொழிக்கு! அப்படிப்பட்ட  என் மொழியை  இயற்கை போற்றுவதாலோ என்னவோ  செயற்கை தேசங்கள்  தூற்றுகின்றது! தூற்றட்டும், தூற்றட்டும்  தமிழால் வாழும்  அத்துரோகிகளுக்கென்ன தெரியும்  தமிழுக்காய் வாழும்  உண்மைத்தமிழர்களைப்பற்றி....! அழிவில் பாதி  அக்கூடா நட்பு கொண்ட  கேடால்! மீதபாதி  கடல் கொண்ட நட்பால்! இருந்தும் உயிர்ப்பிக்கும்  ஒருசில  என் மொழித்துகள்கள் உலகையும் விஞ்சும்...! வெகுவிரைவில்...! இணைய நண்பர்களுக்கு என்னுடைய தாய்த்தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! sakthi