விளையாட்டாக சொல்கிறேன்#24
புதுப்புது வேடமிட்ட திகதிகளுடன் நேரம் யாருக்காகவும் காத்திருக்க விரும்பாமல் கடந்துகொண்டே போயின, கேள்விகள் மட்டும் எப்பொழுதும் போல, மேப் இல்லா புதையலைப் போல தோண்டும் வரை மனதைவிட்டு வரமாட்டேன் என அடம்பிடித்து அழுந்திப்போய்க் கிடந்தன.. ஒரு பொழுதும் அவனை கல்லூரி கேண்டினில் பார்த்ததில்லை, பதினோறு மணிக்கு அவசரமாய் கடிபடும் சூடான பப்சுடனும் கண்டதில்லை. வேறுபட்டவன்தான், அவன் தனிமை விரும்பி, ஒரு கவிஞனைப் போல, ஒரு புத்தனைப் போல, ஒரு சந்நியாசியைப் போல.. கவிஞன் தனிமையைப் பிழிந்து சொற்களை தேடுவான், நண்பன் வாழ்க்கையைத் தேடினான். புன்னகை பழகாத முகம், மாற்றம்பெறாதா அவனது ஆடைகள், பெயருக்கென ஒரு செருப்பு, தன்னை உடைக்கப்போகிறானோ என அஞ்சி நடுங்கி எழுத்துகளை அவன் எழுதும்பொழுதெல்லாம் பாழாக்கும் அவனது எழுதுகோல், காது அழுக்கை எப்பொழுதுமே சிறிது தாங்கி நிற்கும் அவனது சைக்கிள் சாவி கொத்து, என அவனது அடையாளங்கள் அனைத்துமே ஒரு கவிஞனின் கற்பனைக்கு தீனிபோடவல்ல இயற்கையின் அழகை ஒத்த கருப்பொருட்கள். இரண்டாம் ஆண்டு பாதி கடந்திருக்கும், எனக்கேதோ ஒரு திடீர் புத்தி ஒன்று உதித்திருந்தது.. அறிவென்றால் ஆங்கிலம்தானென்ற நம்பிக