இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண் ஒரு தனி இனமல்ல, இம்மனித இனத்தையே உருவாக்கும் மனிதக்கடவுள்.

ஆபாச பாடலுக்கு எழுந்த கடும் எதிர்ப்பலைகளை பற்றியும், அதைத்தொடர்ந்து தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் சட்டநடவடிக்கைப் பற்றியும் அனைவரும் அறிவோம். ஆனால் இவ்வாறான எதிர் வினைகள் மக்களிடம் ஏதேனும் மாற்றத்தை உண்டுபண்ணுமா என்றால் பதில் பண்ணாது என்பதாகவே இருக்க முடியும். எனில் இதற்கான தீர்வு என்ன? தண்டனையா? அப்படியே தண்டித்துவிட்டால் தீர்வு கிடைத்துவிடுமா? தீர்வினை, இதுபோன்ற பெண்களுக்கெதிரான வன்முறைகள் எதனால் நடக்கிறது? அதற்கான மூலக்காரணம் என்ன? அதனை எவ்வாறு தடுக்கலாம்? பொன்ற அடிப்படை கேள்விகளுடன் துவங்க வேண்டும். முதலில் இந்த வன்முறை செயல்கள் நடப்பதற்கான காரணம் பெண்ணைப் பற்றியும், பாலியல் பற்றியும் ஆணுக்கு சரியான புரிதல் இன்மை என்பதால்தான் என்றாலும், இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டிய மற்றொரு விடயமும் உண்டு அதுதான் நம் சமூகத்தில் இருக்கும் இச்சையை தணிப்பதில் நிலவும் வறட்சி. காம இச்சை - இயற்கை. இதனை தணிக்க சிலர் ஆன்மீகத்தையோ, உடற்பயிற்சியையோ நாடலாம். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமன்று. எனவே அதீதமாய் ஏற்படும் இச்சையை தணிக்க வழியின்றி மனதளவில் பாதிப்படைகிறது நம் சமூகம். இவ்வாறான பாதிப்புடனேயே ஒரு

தற்பொழுதைய தேவை நல்ல கல்வியுடன் கூடிய சமூக மாற்றமே.

இன்றைய தந்தியில் ஒரு செய்தி, 'சென்னை பல்கலையில் படிக்கும் வெளிநாட்டை  சேர்ந்த ஒரு மாணவரை அப்பல்கலையின் பேராசிரியர்கள் அடித்துவிட்டனர்'. இது உண்மையில் நம்மையெல்லாம் வெட்கப்படவைக்கும் செய்திதான். ஆசிரியர்கள் அடித்ததற்கான காரணம் அவர் அப்பல்கலைக்கு வருகைதந்த விருந்தினரிடம் கேள்வி கேட்டார் என்பதுமட்டுமே. கேள்வி கேட்கும் அடிப்படை மனித உரிமை கூடவா நம் மாணவர்களுக்குக் கிடையாது..?! நான் இளங்கலை படிக்கையில் எங்களது கல்லூரியின் தேர்வு இயக்குனருக்கு அஞ்சாதவராக யாரும் இருந்ததில்லை எங்கள் துறைத் தலைவர் உட்பட. இதுமட்டுமன்றி பொதுவாக பார்த்தோமானால், மாணவர்களை தம் சொந்த வேலைக்கு பயன்படுத்துதல், மாற்று பாலின மாணவர்களை அலட்சியப்படுத்துதல், பெண் ஆசிரியர்கள் மீதான அடக்குமுறைகள், அடுத்தவர்கள் உடைகள் மீதான கருத்து திணிப்பு, கல்வி பெற்றும் பெண்ணை போகப்பொருளென நினைத்தல், இளைய தலைமுறை ஆசிரியர்களை அடிமைகள் போல் நடத்துதல்  என அடுக்கிக்கொண்டே போகலாம். எப்பொழுதுமே அடுத்தடுத்த தலைமுறையினரிடத்தில் அதீத ஆற்றலும், திறமையும் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் அப்படிபட்ட இளம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் மத்திய, மா