நம்மாழ்வார் (நம்'ஆள்வர்') அச்சமில்லா அறிவார்ந்த செந்தமிழ் குறளுக்கும் வெண்ணிற தாடை முடிக்கும் உரியவரே... இயற்கையையும் இயற்கை போற்றும் எம்மினத்தையும்- காக்க இயற்கை நல்கிய இனியவரே... எம்மைப்பார்த்து சொல்லுங்களேன், இனி யாரிடம் கற்றுக்கொள்ள இந்த மானுட மேலாண்மையையும்.. இயற்கை வேளாண்மையையும் ..! கடனுக்காய் வாழ்பவர் மத்தியில் தான் பெற்ற கடனுக்காய் தன்னையும் மாய்க்கத் துணியும் எம்மின வேளாண் மக்களுக்கு நெஞ்சுரமிட்ட ஒற்றைநம்பிக்கையும் மண்ணுக்கு உரமாகிப்போனதே...! முதலில் நீ விளையாண்டு திரிந்த சோளக்கொல்லையை இழந்தோம்! நீ உண்டு மகிழ்ந்த நாவற்பழங்கள் நல்கும் மரத்தையிழந்தோம்! பின் மண்ணையுமிழந்தோம்! - இன்று உன்னையும் இழக்கிறோமே..! அங்கே இந்திய ஏகாதிபத்திய பரம்பரைக்கும்பல் குதூகலிக்கிறார்கள் ...! எமக்கோ மீளமுடியா துக்கம் நெஞ்சடைத்து, கண்பிளந்து அமிலமழை பொழிகின்றதே...! கேளுங்கள் குதூகலிக்கும் மடையர்களே........ யாம் அவரை இழந்தாலும் அவர் எம்முள் விதைத்த 'சிந்தனை' வீரியமாய் வளர்கிறது பாருங்கள்..., மண்ணை முறித
இடுகைகள்
டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
வீரமரணமென்பதென்ன!!??
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வீரமரணமென்பதென்ன!!?? வெல்வது மட்டுமே வீரமென்றால் இப்புவியில் 'ஆக்கவும், அழிக்கவும்' இயலா 'ஆற்றல்' மட்டுமே வீரமாகும்...! ஏனெனில் மரணமே உடல், உயிருடன் தோற்பதுதானே..! எனில் தோற்பதும் வீரமே! "தம் வாழ்வில் நேர்மையாய் கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்து துய்த்த அனைவரும் எய்துவது வீரமரணமேயன்றி வேறில்லை..!!" தோல்வியால் ஏற்பட்ட அழிவும், வலியும் போராட்ட வழியை மாற்றி 'முன்னுரை' கொடுக்குமேயன்றி ஒருபொழுதும் 'முற்றுப்புள்ளியாகிவிடாது...!' நம் போராட்டம் வெல்லும்வரையில் தோல்விகளென்ற வெற்றி படிகள் நம்மை வழிநடத்தும்...! அப்படிகளில் ஒன்றான 'அன்ரன் பாலசிங்கத்தின்' வீரமரண-நாளை நினைத்து முன்னேறிச்செல்வோம்...!