ஒரு ஆடு நரியான கதை..
ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்... அப்பா, இந்த கதைய நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்களே.. இது வேற ஊரு, வேற நரி.. சரி சரி.. அந்த நரிக்கு தொப்பை பசி வந்துடுச்சி.. பசி எடுக்காத போதே ஹாபிக்காக வேட்டையாடும் மிருகம் நரி.. பசி எடுத்தா என்ன பண்ணும்... தூங்கிடுமா!? யாரா இருந்தாலும் பசி எடுத்தா சாப்பாட தேடி ஓடுவாங்க அதுதான் இயற்கை.. தூக்கமெல்லாம் வராது.. அதனால நரி என்ன பண்ணும்னா, கண்மூடித்தனமா வேட்டையாட கிளம்பிடும்.. அப்படி சிவந்த கண்களுடனும், வெற்று வயிற்றுடனும் வேட்டையாட கிளம்பிய நரி கொஞ்ச தூரத்தில் ரெண்டு ஆட்டு குட்டிகள பார்த்துவிட்டது.. அப்போ அந்த நரி பயந்து ஓடிடுமா.. ஏன்னா ஆட்டுகுட்டி ரெண்டு இருக்கு, நரி ஒன்னுதான.. அடேய், அப்ரசன்டி.. நீயே மீதி கதைய சொல்லுடா.. அப்பறம் என்ன நரி தல தெரிக்க ஓடிப்போயி அவங்க அப்பா அம்மா எல்லாரயும் கூப்டு வந்துருக்கும்.. அப்படிதான் இல்ல.. இதுதான் இயற்கையோட விளையாட்டே.. ஆட்டுகுட்டிக்கு நரிய விரட்டும் அளவுக்கு உடலில் வலிமை இருந்தாலும், மன வலிமை சுத்தமா கிடையாது.. அதனால ஆட்டுக்குட்டி நரிக்கு விருந்தாகிவிடும்.. அச்சோ.. ஆமா, அந்த நரி ரெண்டு ஆட்டுக்குட்டிகள்ல ஒன்ன புடிச்சிக