இடுகைகள்

டிசம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் சத்தமாய் அழவேண்டும்

நான் சத்தமாய் அழவேண்டும் என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும், சாதிய வன்மத்தில் மாய்ந்துபோன என் உடன்பிறவா சகோதரர்களுக்காய் அழவேண்டும், கொடியவர்களின் காம இச்சைக்காய் மறைந்து போன என் உடன்பிறவா சகோதரிகளுக்காய் அழவேண்டும், மனிதனை மடையனாக்கிய மதத்திடம், அறியாமல் அடிமைப்பட்ட- என்மின உறவுகளுக்காய் அழவேண்டும், கலாச்சாரம், கலாச்சாரம் என்றுசொல்லி அறிவியலை எட்டிநின்றும் அனுபவிக்கமுடியா என் முன்னவர்களுக்காய் அழவேண்டும், ஆம், நான் சத்தமாய் அழவேண்டும்...! என் வயது ஐந்தானாலும், பத்தானாலும் என் முன்னவன் எனக்கிட்ட சாதிய போர்வையால், ‘என்னை மரியாதையாய் கூப்பிட்ட பாப்புவையும், பாளையனையும் இன்ன பிறவர்களையும் மறியாதையற்று கூப்பிட்ட என் சிறுவயது மடமையை நினைத்து நான் சத்தமாய் அழவேண்டும்...!’ அய்யகோ.... நான் சத்தமாய் அழவேண்டும்...! என் அழு குரல் உலகம் முழுதும் கேட்க வேண்டும்..! என்னை மன்னியுங்கள், அம்மா பாப்புவும், அய்யா பாளையனும், என்னை மன்னியுங்கள்...! இம்மூடச்சமூகத்தினூடே பிறந்த நாம் ஒவ்வொருவரும் அழவேண்டியவர்களே..!

இலவசம் மறு தமிழா…!!

இங்கு எல்லாம் இலவசம்..! இயற்கை கொடுக்கும் காற்றென்று இனிமையாய் இழுத்தோமென்றால்- பெயர்தெரியா நோய்கள் பல இலவசம்…! உயிர்கொள்ளும் நோய்வரின் நொந்துபோய், மருத்துவமனையில் தஞ்சமடைந்தால்- பஞ்சமான பணப்பையுடன் சேர்த்து, சாவும் இலவசம்..! இங்கு எல்லாம் இலவசம்..! பசியென்றொன்று பல்லிலித்தாலும் வாய்திறந்து பொங்கரிசி இட்டுவிடாதீர், பின், திறந்தவாய் வழி, பொங்கரிசியினூடே உட்சென்ற எமனிடமிருந்து வாய்க்கரிசி இலவசமாய்க் கிட்டும்…! சோறு பொங்க காசு இல்லையென்றாலும் உதவியென்று உற்ற நண்பனிடமும் கேட்டுவிடாதீர் இலவச புத்திமதி இனிதே கிடைக்கப்பெறும்…! உண்மைக் காதல் மையங்கொள்ளினும் மாற்று சாதியை கைபிடிக்காதீர்- காதல் கொலைக்கு நம் பிணங்கள் இலவசம்..! கடவுளையும் விமர்சியுங்கள் மறந்தும் கடவுள் துதிபாடும் மூடனை விமர்சித்தால்- ஆண்மையில்லா ஆளுமையிடமிருந்து மிரட்டல் உறுதியாய் இலவசம்..! இங்கு எங்கு செல்லினும் இலவசம், எதற்கும் இலவசம்…! மனிதமற்றுபோன மதத்திற்கு மூளையற்றுபோன மனிதன் இலவசம்..! மூளையற்றுபோன மனிதனுக்கு நோய்வாய்ப்பட்ட சாதிகள் இலவசம்..! கேட்பாரற்றுபோன தமிழனிற்கோ நாலாபுறமிருந்தும் நயவஞ்