கொரியர்களின் தற்பொழுதைய நிலையும், அதன் மீதான அவர்களின் புரிதலும்.....
கடந்த சனிக்கிழமையன்று (11/10/2014) , ஒரு கொரிய வேதியியல் பேராசிரியருடன் உரையாடியபடி மதிய உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது . அவருடன் பேசுகையில் , ஒரு மாறுபட்ட கொரிய சிந்தனையாளாராக எனக்கு அவர் தோன்றினார் . என்னுடைய இந்த இரண்டாண்டு கொரிய அனுபவங்களில் , இதுதான் முதல் முறை , இப்படிப்பட்ட எண்ணவோட்டமுடைய கொரியரை சந்திப்பது . பொதுவாக கொரியர்களின் எண்ணம் , பொருளாதாரம் ஈட்டுதல் பற்றியே இருக்குமே தவிர , அரசியல் பற்றியோ , உலக நடப்பு பற்றியோ கவலையற்றவர்களாகவே இருப்பார்கள் . கூடவே கண்மூடித்தனமான அமெரிக்க சார்புள்ளவர்களாக தங்களை காண்பித்துக்கொள்வதில் அலாதி மகிழ்ச்சி அவர்களுக்கு . இருக்கட்டும் , நான் செய்திக்கு வருகிறேன் . நான் குறிப்பிடும் பேராசிரியர் , சுகாட்லாந்து நாட்டில் தன்னுடைய ஆய்வுப்பணியை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் , பின் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் முதுமுனைவு ஆய்வுப்பணியை மேற்கொண்டு பின் கொரியாவில் , சாங்வான் பல்கலைகழகத்தில் பேராசிரியராய் தம் ஆய்வுப்பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார் . இவரிடம் பொது