செஸ்ட் நட்டும் பெர்சிம்மானும் - சாங்வான் குறிப்புகள் #12
சில வாரங்களுக்கு முன்புவரை நாற்பது டிகிரியைத் தொட்டுக்கொண்டிருந்த வெப்பநிலை, இப்போது படிப்படியாகக் குறைந்து இருபது டிகிரிக்குள் வந்து நிற்கிறது. இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் குளிர் அதிகரித்துவிடும். மரங்களின் இலைகள் நிறம் மாறி, கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து, சாலைகள் வெறுமையாகும். அதற்குப் பிறகு குளிர்காலம் வந்து எல்லாவற்றையும் உறையவைத்துவிடும். சில நாட்களில் வெப்பநிலை சுழியத்திற்குக் கீழே சென்று, மைனஸ் பத்து டிகிரியையும் தொட்டுவிடும். இப்படிக் கடுமையான குளிருக்கு முன்னும் பின்னுமாக, கொரியர்களின் வாழ்வில் இரண்டு பெரிய விழாக்கள் வருகின்றன.. நிலவை மையமாகக்கொண்ட ஆண்டின் தொடக்கத்தில் கொண்டாடப்படுவது சொல்லால்.. அதுதான் கொரியப் புத்தாண்டு... அடுத்தது, வேனிற்காலம் முடிந்து இலையுதிர்காலம் தொடங்கும் காலத்தில் வரும் அறுவடைத் திருவிழா.. செசோக்.. இரண்டுமே கொரியர்களின் பழமையான நிலவு மற்றும் கதிரவ நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டவை.. சொல்லால் நிலவை மையமாகக் கொண்ட ஆண்டின் முதல் நாள்... அதற்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு வரும் முதல் முழுநிலவு நாளைத் தனியாகக் கொண்டாடுகிறார்கள்... செசோக் எட்டாவது நி...