இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #19

ஏதோ ஒரு கடிதம் வந்ததாக அப்பா சிரித்துக்கொண்டே என்னிடம் கொடுத்தார். யார் வேண்டுமானாலும் படித்துவிடக்கூடிய அளவிற்கு திறந்தே இருக்கும் மஞ்சள் நிற சிறு காகிதத்தில், ஒரு பக்கத்தின் வலது மூலையில், சிரித்துக்கொண்டே இருந்த காந்தித்தாத்தாவின் கீழே, என்பெயரிட்டு முகவரி எழுதப்பட்டிருந்தது. அதே பக்கத்தின் மறுமுனையில் கீழே அனுப்பியவர் முகவரியுடன், மேலே நீண்டிருந்தது முதல்பக்க எழுத்துகளின் தொடர்ச்சி. 'அன்புள்ள ஜிஎஸ் க்கு, அன்புடன் எஸ்எஸ்பி எழுதிக்கொண்டது, நலம் நலமறிய ஆவல். ஜிஎஸ்பி கடிதம் எழுதினானா, விடுமுறை எப்படி கழிகிறது', என நீண்டுகொண்டே போன சொற்கள், அன்புடன் எஸ்எஸ்பி என்று முடிந்திருந்தது. நான் படிக்க படிக்க, பின்னணி இசை போல சிரித்துக்கொண்டே இருந்தார் பெரியண்ணன். அவர் முன்பே அந்த கடிதத்தை படித்துவிட்டார் போல. அனைத்து பெயர்களுமே இனிசியலாக மட்டுமே குறிப்பிடப்பட்டதை நினைத்து சிரித்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். ஆனால், ரிமோட்டிலிருந்து பாய்ந்து செல்லும் கண்ணிற்கே புலப்படாத அந்த அகச்சிவப்பு கதிரை, தொலைக்காட்சி பெட்டி மட்டும் கண்டுகொள்வதைப்போல, அந்த கடிதத்துள் பதுக்கப்பட்டிருந்த நண்பனின் அன்ப...

விளையாட்டாக சொல்கிறேன் #18

வாழ்கையை ஒரு பயணமாகத்தான் பெரும்பாலும் உருவகித்துக்கொள்கிறோம் காரணம், நேரமென்ற நான்காது பரிமாணத்தை நம்மின் முப்பரிமாண காட்சிகள் கடந்துசெல்வதால்தான். ஆனால் நம் வாழ்வு, அந்த நான்காவது பரிமாணத்தில் முன்னோக்கி மட்டுமே செல்லப் பழக்கப்பட்டிருக்கிறது. அதாவது முன்னோக்கி பாய்ந்து செல்லும் ஒரு தொடர்வண்டியைப்போல. அந்த வாழ்வென்ற தொடர்வண்டியின் கடைசிப்பெட்டியில் பயணப்படுவதுதான் நம்மின் நினைவுகள். அது முன்னோக்கி செல்லும் தொடர்வண்டியுடனேயே இணைந்திருந்தாலும், பின் கடந்துவந்த பாதையையும் பார்த்துக்கொண்டேதான் வரும். வாழ்வை தாங்கி நகர்த்திசெல்லும் நேரமென்ற இரும்பு பாதையை அசையாது தாங்கி நிற்கும் அன்பென்ற சிறுகற்கள் பாதைநெடுகிலும் இறைந்து கிடக்குமே, அந்த அன்பு செலுத்தியவர்கள் பலராலும் கட்டமைக்கப்பட்டதுதான் இந்த வாழ்வென்ற பயணம். பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த அந்த சிறுவனான என்னை அடித்தவண்ணம் தரதரவென கப்பி சாலையில் இழுத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார் அப்பா. சிங்கபூரிலிருந்த வந்திருந்த மாடிவீட்டு தாத்தாதான், கடவுளாக என்னைக் காத்து பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தார். பல நாட்களாக பள்ளிக்கு செல்லவே கசந்த நிலையி...

விளையாட்டாக சொல்கிறேன் #17

பழைய மரத்தாலான கேன்வாஸ் ரக சாய்வு நாற்காலி ஒன்றில் கால் மீது கால் போட்டு, நடு வகுடெடுத்த தலையில் வெள்ளி இழைகள் முட்டிமோதி மேலெழுந்து அசைந்துகொண்டிருக்க, வலது கை கடிகாரம் ஆடும் படி கையை அசைத்து அசைத்து எதையோ நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, கீற்று மட்டைகள் வேய்ந்த மாடியில், தென்னங்காற்றில் கரைந்துகொண்டே இந்த காட்சிகள் நடந்திருக்கலாம் என அவதானிக்கிறேன். அவரின் பேச்சின் இடையே, அவர் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை அவரின் நண்பர்கள் பெரிதாக கவனித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் இறந்த பிறகு அவர் அமர்ந்திருந்த அந்த சாய்வு நாற்காலி அவரைப்பற்றி நினைவுகளை உரக்க சொல்லிக்கொண்டே இருந்தது. 'பெரும்பாலும் உங்க தாத்தா, கேன்வாசுலதான் தூங்குவார், அப்படி தூங்கயில நாய் கட்டிலுல தூங்கும், தாத்தா கட்டிலுல தூங்குனார்னா, நாய் கேன்வாசுல படுத்திருக்கும்' என்று வடக்கு வீட்டு பெரிய அண்ணன், அந்த கேன்வாசிற்கும், தாத்தாவிற்கும் இடையே நாயின் அன்பு எப்படி பரவிக்கிடந்தது என்பதை பலதடவை சொல்லியிருக்கிறார். எத்தனை திருமண பேச்சுகளையும், சொத்து தகராற...

விளையாட்டாக சொல்கிறேன் #16

நரிகள் ஊளையிடும் சத்தம் காதை பிளந்துகொண்டிருந்தது. தினம்தினம் ஆடுகளையோ, கோழிகளையோ இழப்பதே மக்களின் பெரும் இடையூறுகளாக இருந்தன. மனிதனின் மூதாதையர்களான குரங்குகள் பல இன்றும் குரங்குகளாக இருப்பது போலவே, நாய்களின் மூதாதையர்களான நரிகள் அப்படியே கொடுங்குணத்துடந்தான் இருக்கின்றன. பொழுதுபோக்கிற்காகவே வேட்டையாடும் அந்த கொடிய நரிகளை, உலக சமூகத்தில் மங்கோலியர்கள் மட்டுமே தன் குலச்சின்னமாக தொழுதனர் என்பதை பிற்பாடு ஓநாய்குலச்சின்னம் (wolf totem in english written by Jiang Rong, தமிழில் சி. மோகன்) புத்தகத்தில் படித்துதான் தெரிந்துகொண்டேன். காரணம், அவைகள் மங்கோலியாவின் 'புல்வெளி பகுதிகளை', புற்களை உண்டு வாழும் முயல்கள், மான்களிடமிருந்து காக்கின்றன என்பதுதான். ஆனால் அதில் மற்றுமொரு பயனும் இருந்திருந்தது அந்த மஞ்சள் நிற மங்கோலியர்களுக்கு. இந்த உலகத்தையே ஆட்சி செய்த மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான், போர்முறை தந்திரங்களை இந்த ஓநாய்களிடம்தான் கற்றிருந்தார். அதனால்தான் இந்த உலகத்தையே வென்றிருக்க முடிந்தது செங்கிஸ்கானால். இயற்கையாக படைக்கப்பட்ட எதுவும் எதோவொரு வகையில் மனிதனுக்கு பயனுள்ளவைகளாகவே இருக்கின...

விளையாட்டாக சொல்கிறேன் #15

வாழ்க்கை முழுவதுமான நினைவுகளை எடுத்து சல்லடை கொண்டு சலித்தால், பெரும்பாலும் சல்லடையில் எஞ்சும் பெரும் நினைவுகளாக நிற்பது நாம் மேற்கொண்ட பயணங்கள் தான். மனிதன் தன் கடைசிப் பயணத்தை தவிர மற்ற அனைத்தையும், வேடிக்கையுடன், ரசித்துக்கொண்டேதான் பயணிக்கிறான். பயணங்கள் ஒரு தொலைக்காட்சி தொடரை விளம்பர இடைவேளை இன்றி, ஒரேயடியாக பார்ப்பதுபோலொரு உணர்வை கொடுக்கவல்லது. அந்த தொடரை காண்பிக்கும் சாளரம், பேருந்தின் சன்னலின் அளவுடையதாகவோ, உந்துருளி பின் இருக்கையிலிருந்து பார்க்க முடிந்த 180 டிகிரி அளவுடையதாகவோ, ஒருசிலருக்கு மகிழுந்தின் சன்னல் அளவுடையதாகவோ இருக்கலாம். பல வேளைகளில், திரையை மறைக்கும் விதமாக, நமக்கு முன்பே வந்து சன்னலோர இருக்கையை பிடிக்க ஒருவர் தயாராக இருக்கலாம். இருந்தும் எக்கி பார்த்த காட்சிகள் நீங்கா நினைவுகளுக்குள் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எங்கோ, ஏதோவொரு பயணத்தில் பார்த்த துள்ளியாடும் ஆட்டு குட்டிகளை பார்த்து மனம் துள்ளிக் குதித்திருக்கும், என்றோ சாளரம் வழி கண்டிருந்த சிறு சண்டை சச்சரவுகள் நம்மை பாதித்திருக்கும். நானா அவனா ஒரு பங்குடு பண்ணிட்டு வரேனென பயணப்பட்டவர்கள், பயண...

விளையாட்டாக சொல்கிறேன் #14

எங்கோ கேட்ட குரல் அது, சற்றே உரக்க கேட்கிறது. 'அய்யோ கொடும்பாவி, ஆகாச சக்களாத்தி, சுக்கீரம் பொண்டாட்டி, சுக்கீரன விட்டுடடி' என்ற அந்த ஒப்பாரி, பாப்புவின் குரல்தான். உண்மையில் ஒரு ஒப்பாரிப்பாடல், மனிதனின் மனதை மாற்றவல்லது, துக்கத்தையும் எளிதில் கடக்க துணைபுரிவது. கையறுநிலையை பாடலாக வடித்து இசைப்பது என்பது ஒரு பெரிய இலக்கிய வடிவம். பாரியின் இறப்பையும், அதியமானின் இறப்பையும் விளக்கும் சங்க இலக்கியங்கள், கையறுநிலை பாடல்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன. அப்படிப்பட்ட ஒப்பாரியை உலகளவில் எடுத்துச்செல்ல நம்மவர்கள் தவறிவிட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  மழை வேண்டி கொடும்பாவி எரிப்பது கிராமங்களில் வழக்கமான ஒன்றுதான். பாப்புவின் குரலைத்தான் பெரும்பாலான வேளைகளில் கொடும்பாவி கேட்டுக்கொண்டே எரிந்து மகிழும். மூளை சுருக்கங்களை ஒத்த தோல்கள், மேலாடை அணியாது, கைத்தறி புடவையால் மறைக்கப்பட்ட உடல், இடுப்பு சுருக்கு பை, கனிவான சொற்கள், அளவில்லா அன்பு என தனிப்பெரும் அடையாளம் கொண்ட பாப்பு ஒரு அமைதிக்கான நோபெல் பரிசுக்கு தகுதிபெற்றவர். பாப்புவிற்கு உழவன் மீதும், உழவு மீதும் அவ்வளவு பற்று. உழவின் மீது உழவனுக்க...

விளையாட்டாக சொல்கிறேன் #13

'என்னங்கிறேன் நிக்கிற, உக்காரவேண்டிதானே, நீயே பேர புள்ளைகள எடுத்தப்புறமுமா எனக்கு மரியாத குடுப்ப, எல்லாம் மனசில இருந்தா போதுங்கிறேன்!' என எப்பொழுதுமே என் அப்பாவிடமும், பெரியப்பா, சித்தப்பாக்களிடமும் என் தாத்தா கேட்பது வாடிக்கை. சனி மூலையில் திரண்டு வரும் மேகம் கூட சிலவேளைகளில் மழையாக மாறாமல் காற்றுடன் சலனப்பட்டு களைந்து சென்றுவிடலாம், ஆனால் அப்பாவோ, அப்பாவின் உடன்பிறப்புகளோ என்றுமே தாத்தாவின் முன்பு இருக்கையில் அமர்ந்ததாக சரித்திரமில்லை. தாத்தா ஒரு வாழ்க்கை நெறி தெரிந்த ஒரு வித்தைக்காரர். முயற்சியால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிட முடியாது, கூடவே சிக்கனமும் தேவை என்பதை உணர்ந்தவர். அவரின் தந்தை தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து ஒன்றுமில்லாமல் குடும்பத்தை இவரிடம் ஒப்படைத்த நேரத்தில், வாரத்திற்கு நிலத்தைப் பிடித்து, தம் மகன்கள் அனைவரையும் வரிசைகட்டி ஏர்பிடிக்க வைத்து, சிறிது சிறிதாகத்தான் சொத்தை சேர்த்திருக்கிறார். என் அப்பாவுக்கு முன் இருவரையும், அவருக்கு பின் ஐவரையும் பெற்ற இரும்புப்பெண்மணியான பாட்டி ஒருநாள் இறந்துவிடவே, அத்தை ஒருவரைத்தவிர பெண் என்று வீட்டில் யாருமில்லாத சூழ...