இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும்

படம்
இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும் என சிந்தித்துப்பார்த்தேன்.. நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், நெட்டிலிங்க மரத்தடியிலும் (இதை அசோக மரம் என்கிறார்களே, உண்மையா?), வாதாமரத்தடியிலும்தான் பெரும்பாலும் வகுப்புகளும், தேர்வுகளும் நடக்கும்.. குறிப்பாக, தமிழ் பருவத்தேர்வுகள் அப்படியான மரத்தடி நிழலில், காக்காவின் எச்சத்திற்கு பயந்தும், பதிலைத்தேடியும் மரக்கிளைகளை பார்த்தவண்ணம் நடந்தேறும்.. கீழே இணைக்கப்பட்டுள்ள படம், சப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பூங்காவில் எடுத்தது.. இது ஒரு வகுப்பறையில்லை.. ஆனால், சப்பானிய மொழியில் வெளிவந்து, உலகம் முழுவதும் மக்களால் வாசித்து கொண்டாடப்பட்ட ஒரு நூல் டோட்டோ-சான் - சன்னலில் ஒரு சிறுமி.. அந்த நூலின் நினைவைக்கொடுத்தது இந்தப்படம்.. சப்பானிய மொழியில், இந்த நூலை எழுதியவர் நலமுடன் டெட்சுகோ குரோயாநாகி (திருமண பத்திரிக்கையில் எழுதுவார்களே.. நலமுடன் - உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பு).. அவரின் வயது இப்பொழுது 95ஐ நெருங்கும் என நினைக்கிறேன்.. அவரின் சிறுவயதில் டோட்டோ-சான் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.. அவரின் பெயரான டெட்சுகோ என்பதை சொல்லத்தெரியாத சப...

மAIத்துனன் அலப்பறைகள்

  நண்பர் ஒருவர் தனி செய்தியில் வந்தார்.. அவரை நான் இதற்கு முன்பு சந்தித்த ஞாபகம் இல்லை.. அதனால், Have we met anytime? என்று கேட்டு தட்டச்சினேன்... ஆனால், அருகில் இதை கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மைத்துனன், இதை இப்படி கேட்கக்கூடாது மச்சி என்றான்... சரி எப்படி கேட்கவேண்டும் என அவனிடம் வினவியபோது, Do you know if we've met anytime? என்று கேள், என்றான்.. நானும் அப்படியேதான் செய்தேன்.. அவனுக்கு என்னைவிட ஆங்கிலம் அத்துப்படி.. ஆங்கிலம் மட்டுமல்ல, அனைத்துமே.. சிறிது நேரம் அவனை, இவ்ளோ நாளு எங்க இருந்த நீ.. என்றவாறு மெய்சிலிர்த்து பார்த்துவிட்டு, அந்த செய்தியை, அந்த நண்பருக்கு அனுப்ப முற்பட்டேன்.. இரு இரு.. இத இன்னும் சரிப்படுத்தலாம்.. என்றான் மைத்துனன்.. எப்படி? என்றேன்.. இதை, Do we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்.. நானும் அப்படியே செய்தேன்... இப்பொழுதும் அதே மெய்சிலிர்ப்புடன் கூடிய ஒரு பார்வையை வீசினேன்.. இன்னும் உற்சாகமான அவன், இதுவும் வேண்டாம் என, Would you happen to know if we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்.. அதே சிலிர்ப்பு.. ஆனால் இப்பொழுது கொஞ்சம் வெறுப்பும் ஒட...

கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்

படம்
  நாட்குறிப்பை பதிவு செய்கிறேனோ இல்லையோ , நாட்குறிப்பேட்டை மட்டும் அழகானதாக வாங்கிவைத்துக்கொள்வது என்னுடைய வழக்கம்.. இந்தப் பழக்கம் , என்னுடைய நண்பன் வினோவிடமிருந்து வந்தது.. டிசம்பர் வந்துவிட்டால் போதும் , மொத்த தஞ்சாவூரையும் அலசி ஆராய்ந்து , குறைந்தது இரண்டு மூன்று நாட்குறிப்பேட்டையாவது வாங்கிவிடுவான்.. தாத்தாவிற்கு ஒன்று , எனக்கொன்று , என.. அவனுடைய கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும்.. எத்தனை பாடுபட்டும் , அந்த கையெழுத்து எனக்கு வாய்க்கவில்லை.. கையெழுத்தில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.. அந்த நாட்குறிப்பை எழுதிவிட்டு , என்னுடைய கையெழுத்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னாலேயே வாசிக்கமுடியாது என்பதை நினைக்கையில் , அந்த நாட்குறிப்பேடு இரண்டு நாட்களுடன் தன் வாழ்வின் பலனை முழுவதும் பெற்றுவிட்டதைப்போல , வெற்று காகிதமாகவே எஞ்சி நின்றுவிடும்.. பின்னர், ஆண்டு பொறிக்கப்பட்ட அந்த குறிப்பேட்டின் பக்கங்கள், தனக்கு தொடர்பே இல்லாத ஒரு அண்டின் நாட்களில் நடக்கும் செல்வுகளையும் அதன் கூட்டுத்தொகையையும் தாங்கி நிற்கும்.. பிற்பாடு , கையெழுத்து சரியில்லை என்றாலும் எழுதலாமே என்று தவறா...

சாங்வான் குறிப்புகள் #05

 குவான் என்றொரு நண்பர் கொரியாவில் எனக்கு உற்ற தோழராக இருந்திருந்தார். இதேபோலொரு ஆண்டு தொடக்கத்தின்பொழுதுதான், சரியாக சொல்லவேண்டுமானால், 2012ஆம் ஆண்டு, ஜனவரி மாதம்தான் அங்கு என் கால் தடத்தை, இல்லை இல்லை.. வுட்லேண்ட் ஷூவின் தடத்தை பதியவைத்திருந்தேன். அப்படி ஒரு ஷூவை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த கொரிய பயணம்தான்.. என்னை வரவேற்க வந்த ஹன் ஜூ வூ என்ற பெண்ணும், அவரின் தோழியும், என்னிடம் கந்தி என்ற சொல்லைத்தவிர வேறு ஏதும் சொல்லவில்லை.. பின்புதான் அவர்களுக்கு ஆங்கில சொற்கள் வாயில் நுழையாது, நுழைந்தாலும் வெளியில் வராது எனத்தெரிந்துகொண்டேன்.. அன்றிலிருந்தே நான் ஒரு ஆங்கிலேயனாய் என்னை உணர்ந்துகொள்ள தொடங்கிவிட்டேன், அது வேறு கதை... பின்னொரு நாளில்தான், அன்றுவரை கந்தி என்பது கொரிய சொல் போல என நினைத்துக்கொண்ட எனக்கு பேரிடி விழுந்தது.. என்னுடைய பெயரின் பின்னொட்டாக இருக்கும் எனது அப்பாவின் பெயரான காந்தி என்பதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட பொழுது எனக்கு கொரியாவில் வயது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன... தவழமுடியா வயதானாலும், அந்த கொரிய தோழனின் உதவியால் தவழ அல்ல, எழுந்து ஓடகூட செய்...