மAIத்துனன் அலப்பறைகள்

 நண்பர் ஒருவர் தனி செய்தியில் வந்தார்..

அவரை நான் இதற்கு முன்பு சந்தித்த ஞாபகம் இல்லை.. அதனால்,
Have we met anytime? என்று கேட்டு தட்டச்சினேன்...
ஆனால், அருகில் இதை கவனித்துக்கொண்டிருந்த என்னுடைய மைத்துனன், இதை இப்படி கேட்கக்கூடாது மச்சி என்றான்... சரி எப்படி கேட்கவேண்டும் என அவனிடம் வினவியபோது,
Do you know if we've met anytime? என்று கேள், என்றான்..
நானும் அப்படியேதான் செய்தேன்.. அவனுக்கு என்னைவிட ஆங்கிலம் அத்துப்படி.. ஆங்கிலம் மட்டுமல்ல, அனைத்துமே..
சிறிது நேரம் அவனை, இவ்ளோ நாளு எங்க இருந்த நீ.. என்றவாறு மெய்சிலிர்த்து பார்த்துவிட்டு, அந்த செய்தியை, அந்த நண்பருக்கு அனுப்ப முற்பட்டேன்..
இரு இரு.. இத இன்னும் சரிப்படுத்தலாம்.. என்றான் மைத்துனன்..
எப்படி? என்றேன்..
இதை, Do we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்..
நானும் அப்படியே செய்தேன்...
இப்பொழுதும் அதே மெய்சிலிர்ப்புடன் கூடிய ஒரு பார்வையை வீசினேன்..
இன்னும் உற்சாகமான அவன், இதுவும் வேண்டாம் என,
Would you happen to know if we have met anytime? என்று மாற்றிவிடு என்றான்..
அதே சிலிர்ப்பு.. ஆனால் இப்பொழுது கொஞ்சம் வெறுப்பும் ஒட்டிக்கொண்டு வந்தது..
இப்பொழுதாவது அனுப்பிக்கொள்ளவா மைத்துனனே என்று கெஞ்சலுடன் 'Would you happen to know if we have met anytime?' என்ற சொற்றொடரை அனுப்ப ஆயத்தமானேன்..
அவன் மீண்டும் மஞ்சள் கொடியை காண்பித்து புன்னகைத்துக்கொண்டிருந்தான்..
இதற்கு மேல் என்ன மைத்துனா?, என்றேன்..
இல்ல, இதுக்கு மேலயும் ஒன்னு இருக்கு.. என்றான்..
சரி, சொல்லும்.. சொல்லித்தொலையும், என்று கேட்டேன்..
இதுக்கு மேல நான் உனக்கு திருத்தி சொல்லணும்னா, எனக்கு நீ காசு கொஞ்சம் கொடுக்கணும்.. உறவுனாலும், வாயும் வயிறும் வேறதானே.. என்று வக்கணையாக கேட்டு திரும்பிக்கொண்டான்..
வேறு வழி, மைத்துனனாயிற்றே.. மைத்துனன் இன்றி மலையேறமுடியுமா.. நான் ஏறுவதெல்லாம் மலைமட்டும்தானே.. அதனால் சரி என்று கொடுத்தேன்..
இப்பொழுது, மிகவும் மகிழ்ச்சியுடன் மைத்துனன் சொன்னான்,
Have we met anytime? என்றே அனுப்பு, நன்றாக இருக்கிறது என்று..
மAIத்துனன் அலப்பறைகள்..
- சகா..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கனவு...

விளையாட்டாக சொல்கிறேன் #2

சாங்வான் குறிப்புகள்#01