இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும்
இப்படி ஏன் நம் பள்ளிகள் மாற்றப்படவேண்டும் என சிந்தித்துப்பார்த்தேன்.. நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், நெட்டிலிங்க மரத்தடியிலும் (இதை அசோக மரம் என்கிறார்களே, உண்மையா?), வாதாமரத்தடியிலும்தான் பெரும்பாலும் வகுப்புகளும், தேர்வுகளும் நடக்கும்.. குறிப்பாக, தமிழ் பருவத்தேர்வுகள் அப்படியான மரத்தடி நிழலில், காக்காவின் எச்சத்திற்கு பயந்தும், பதிலைத்தேடியும் மரக்கிளைகளை பார்த்தவண்ணம் நடந்தேறும்..
கீழே இணைக்கப்பட்டுள்ள படம், சப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பூங்காவில் எடுத்தது.. இது ஒரு வகுப்பறையில்லை.. ஆனால், சப்பானிய மொழியில் வெளிவந்து, உலகம் முழுவதும் மக்களால் வாசித்து கொண்டாடப்பட்ட ஒரு நூல் டோட்டோ-சான் - சன்னலில் ஒரு சிறுமி.. அந்த நூலின் நினைவைக்கொடுத்தது இந்தப்படம்..
சப்பானிய மொழியில், இந்த நூலை எழுதியவர் நலமுடன் டெட்சுகோ குரோயாநாகி (திருமண பத்திரிக்கையில் எழுதுவார்களே.. நலமுடன் - உயிரோடு இருக்கிறார் என்ற அறிவிப்பு).. அவரின் வயது இப்பொழுது 95ஐ நெருங்கும் என நினைக்கிறேன்.. அவரின் சிறுவயதில் டோட்டோ-சான் என்றே அழைக்கப்பட்டிருக்கிறார்.. அவரின் பெயரான டெட்சுகோ என்பதை சொல்லத்தெரியாத சப்பானிய குழந்தைகள் அவரை டோட்டோ என்று அழைத்திருக்கிறார்கள் (நமக்கும் அந்த சப்பானிய சொல்லை உச்சரிக்க வரவில்லைதானே.. நாமும் சப்பானிய குழந்தைகள்தான் என்பதறிக..). (ச்)சான் என்பது பொதுவாக குழந்தைகளை, சிறுவர்களை குறிக்கும் சப்பானிய சொல்.. (என்பெயர் சகா-சான்.. எனில், உங்கள் பெயர்..?)
தன்வரலாற்று நூலான அதில், டோட்டோ-சான் மிகவும் ஆர்வமுள்ளவள், எதையும் கேள்வி கேட்பவள். வகுப்பறையில் அமைதியாக உட்கார்ந்து பாடம் கேட்கும் பழக்கம் அவளுக்கு எப்பொழுதும் இல்லை. பாடம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே சன்னலருகே நின்று வெளியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.. தெருவில் வரும் இசைக்கலைஞர்களை அழைப்பாள், அவர்களுடன் உரையாடுவாள்.. பூக்கள், பறவைகள் என எல்லாமும் அவளுக்கு பேசும் சக உயிர்களாகவே தோன்றும்.. அனைத்துடனும் உரையாடுவாள்.. ஆசிரியர்கள் சொல்லும் முறைக்கு அவள் உட்படவேமாட்டாள். இதனால் அவள் படித்த பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறாள்.
தன்வரலாற்று நூலான அதில், டோட்டோ-சான் மிகவும் ஆர்வமுள்ளவள், எதையும் கேள்வி கேட்பவள். வகுப்பறையில் அமைதியாக உட்கார்ந்து பாடம் கேட்கும் பழக்கம் அவளுக்கு எப்பொழுதும் இல்லை. பாடம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே சன்னலருகே நின்று வெளியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.. தெருவில் வரும் இசைக்கலைஞர்களை அழைப்பாள், அவர்களுடன் உரையாடுவாள்.. பூக்கள், பறவைகள் என எல்லாமும் அவளுக்கு பேசும் சக உயிர்களாகவே தோன்றும்.. அனைத்துடனும் உரையாடுவாள்.. ஆசிரியர்கள் சொல்லும் முறைக்கு அவள் உட்படவேமாட்டாள். இதனால் அவள் படித்த பள்ளியில் இருந்து நீக்கப்படுகிறாள்.
அதன் பின், அவள் டோமோயே பள்ளி என்ற முற்றிலும் வேறுபட்ட பள்ளியில் சேர்கிறாள். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோபயாசி மிகவும் அன்பும் புரிதலும் கொண்டவர். அவர் குழந்தைகளை கட்டுப்படுத்துவதை தவிர்த்து, அவர்களின் உலகத்தைப் புரிந்துகொள்கிறார். அந்தப் பள்ளியில் வகுப்பறைகள் கூட வேறுபட்ட முறையில் பழைய ரயில் பெட்டிகளில் அமைக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் இயற்கையோடு நெருக்கமாக கற்றுக்கொள்கிறார்கள். பாடம் என்பது புத்தகத்தில் மட்டும் இல்லை, நாம் வாழும் வாழ்க்கையிலும் இருக்கிறது என்பதை அந்தப் பள்ளி காட்டுகிறது.
டோட்டோ-சான் அங்கே மெதுவாக மலர்கிறாள்.. அவளுடைய குறும்புத்தனமான, ஆர்வம் மிகுந்த கேள்விகள் எல்லாம் குறையாக பார்க்கப்படாமல், அவளுடைய தனித்தன்மையாக மதிக்கப்படுகின்றன. அன்பான சூழல் கிடைத்தால் ஒரு குழந்தை எவ்வளவு அழகாக வளர முடியும் என்பதை அந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. (நமக்கு அந்த அன்பான சூழல் கிடைத்ததா..? குறைந்தது, இப்பொழுது நம்முடைய குழந்தைகளுக்கு அதனை உருவாக்கிக்கொடுத்திருக்கிறோமா..?)
இந்தக் கதையை நாம் வெறும் குழந்தைகளுக்கான கதை என்று கடந்துவிடமுடியாது. அதற்கு மேலாக, கல்வி என்றால் என்ன? ஒரு நல்ல ஆசிரியர் யார்? குழந்தைகளின் சுதந்திரம், ஆர்வம், தனித்தன்மை ஆகியவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும்? என்ற பெரிய கேள்விகளை முன்வைக்கும் படைப்பாகவே அமைகிறது.
டைவர்சன் அலர்ட்..
தன்வரலாற்று நூல் என்பதால், அந்தப்பள்ளி இருக்கவேண்டும்தானே என்று, இரண்டாண்டுகளுக்கு முன்பு டோக்கியோ சென்றபோது, சென்று பார்வையிடலாம் என்று ஆவலாக இருந்தேன்.. பெரும்பாலும் ஆய்வகத்திலேயே வெட்டியாக சென்றுவிட்ட நாட்களைத்தாண்டி, பயனுள்ளதாக ஆக்க அந்தப்பள்ளியை பார்வையிட செல்லும்முன் கூகுள் அங்கிளிடம் கேட்டால் அவர் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டார்..
அந்தப் பள்ளி இப்பொழுது அந்த இடத்தில் இல்லை.. (அதானே, ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை வளரவிடுமளவிற்கு ஏமாந்தவர்களா நாம்..!)
1945 இல் ஒரு விமானத்தாக்குதலுக்கு அந்தப்பள்ளி இரையாக்கப்பட்டுவிட்டது.. மீண்டும் அப்படி ஒரு பள்ளி உருவாகவில்லையே தவிர, அப்படி ஒரு பள்ளி உலகம் முழுவதும் உருவாகவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறது அந்தப்பள்ளியும், அதன் முதல்வரும்..
டைவர்சன் அலர்ட்..
அப்படி ஒரு பள்ளியை இந்தியாவில் உருவாக்கிக்காட்டியவர் தாகூர்.. நம்மூரில் எடுத்துக்கொண்டால், திருப்பூரில் தாய்த்தமிழ்ப் பள்ளி (தாய்த் தமிழ்ப் பள்ளி திருப்பூர்) என்ற ஒன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.. ஆசிரியர்களின் ஊர் என்று செல்லமாக அழைக்கப்படவல்ல வேதை பகுதிகளில், பல ஆசிரியர்கள் தங்களின் முன்னெடுப்பில் பல செயல்களை செய்துகொண்டிருக்கின்றனர்.. அவர்களுடன் பயணிக்க ஆவலாக இருக்கிறது..
தாகூர் உருவாக்கிய ஒரு கிராமம் இன்றும் இருப்பதாக எழுத்தாளர் எஸ்ரா அவர்கள் கூறி கேள்விப்பட்டேன்.. சப்பானுக்கு மீண்டும் சென்று அந்த இடத்தை பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா தெரியாது, ஆனால், நம்மூரில், மேற்கு வங்கத்தில் அதனை சென்று பார்வையிடவேண்டும் என்ற ஆர்வம் மேலெழுகிறது.. விருப்பம் உள்ளவர்கள் சொல்லுங்கள், சேர்ந்து பயணிப்போம்.. (இப்படி பல சுற்றுலா திட்டமிடல்களை பேச்சுவழக்குடன் முடித்துக்கொள்வது என் வழக்கம்..)
- சகா..

கருத்துகள்
கருத்துரையிடுக