அழகாக காண்பித்துக்கொள்ள எதற்கு சாதனை!?
கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைதளங்களைத் திறந்தாலே 80களின் புகைப்படங்கள்தான்.. ஆண்கள், பெண்கள் என்று எல்லோரும் எண்பதுகளுக்குள் சென்று வந்துகொண்டிருக்கிறார்கள். அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எனக்கு வேறொன்று தோன்றியது. நம்மவர்கள் தங்களை அழகாகப் பார்த்துக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கமுடியும்.. ஆனால், அதைச் செய்வதற்குக்கூட நமக்கு AI (செநு) தேவைப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. செநு மூலம் நம்மை அழகுபடுத்திக்கொள்வதில் இரண்டு வசதிகள் இருக்கின்றன. ஒன்று, நாம் எப்படி இருக்க ஆசைப்படுகிறோமோ அப்படி நம்மையே ஒருமுறை பார்த்துக்கொள்ள முடிகிறது. இரண்டாவது, யாராவது, என்னப்பா... இவ்வளவு பில்டப்பா.. என்று கேட்டால், அட, செநு பண்ணினதுப்பா... என்று சிரித்துக்கொண்டே கடந்துவிடலாம். அதாவது, அழகாகத் தோன்ற வேண்டும் என்ற ஆசை நம்முடையது. ஆனால் அந்த ஆசைக்கான பொறுப்பை மட்டும் செநுவிடம் கொடுத்துவிடுகிறோம். இதில்தான் கொஞ்சம் உளவியல் இருக்கிறது. நம்மில் பலருக்கு நம்மை முதன்மைப்படுத்திக்கொள்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது.. நன்றாக உடை அணிவது, முடியை கொஞ்சம் அலங்கரித்துக்கொள்வ...