இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாங்வான் குறிப்புகள் #08

படம்
சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து கருவக்காட்டிற்குள் புகுந்து தொலைந்துபோவது வழக்கம். அதைக் கண்டுபிடிப்பதற்கு எங்களிடம் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாடு ஒன்று இருந்தது.. பந்து எந்தத் திசையில் சென்றது என்பது ஓரளவிற்கு நினைவில் இருக்கும், ஆனால் எங்கே விழுந்தது என்பதுதான் தெரியாது.. அதனால் உடனே இன்னொரு பந்தை எடுப்போம், தொலைந்த பந்து எந்த திசையில், எந்த வேகத்தில் சென்றதாக நினைக்கிறோமோ, கிட்டத்தட்ட அதேபோல இன்னொரு பந்தை எறிவோம். இந்த முறை எல்லோரும் கண்சிமிட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருப்போம். இரண்டாவது பந்து எங்கே விழுகிறதோ, அந்த இடத்தைச் சுற்றி ஒரு பத்து மீட்டர் வட்டமடித்துத் தேடினால், முதல் பந்து கிடைத்துவிடும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.. சில நேரங்களில் கிடைத்திருக்கிறது. பல நேரங்களில் கிடைக்காமல் போயிருக்கிறது. ஆனால்... பந்து கிடைக்காததால் எங்கள் கோட்பாடு ஒருபோதும் பொய்யாகிவிடுவதில்லை.. செய்முறைப் பிழை - experimental error என்று எடுத்துக்கொண்டு இன்னொரு பந்தை வைத்து, அடுத்த ஆட்டத்திற்கு போய்விடுவோம்.. சில வேளைகளில் அந்த கோட்பாட்டை செயல்படுத்துவதற்காக பயன்படுத்திய பந்...

மிஷ்கின் என்னும் நான்..

படம்
  மிஷ்கின் என்னும் நான்.. மிஷ்கினின், கோபியுடனான நேர்காணலை முழுவதுமாகப் பார்த்தேன். பார்த்தேன் என்று சொல்வதைவிட, வாசித்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஒரு முழு நாவலை வாசித்து முடித்த உணர்வு. எத்தனை மனிதர்கள்.. எத்தனை புத்தகங்கள்.. எத்தனை திரைப்படங்கள்.. எத்தனை நினைவுகள்.. என்னவொரு வாழ்க்கை.. ஒரு மனிதனுக்குள் இவ்வளவு உலகங்கள் இருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது. மிஷ்கின் பொதுவாக மேடைகளில் பேசுவது அவ்வளவாக எனக்கு பிடிப்பதில்லை.. ஆனால், இந்த நேர்காணலில் அவரின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. தான் வாசித்த புத்தகத்தையும், பார்த்த திரைப்படத்தையும், சந்தித்த மனிதனையும் முதலில் தனக்குள் அனுமதிக்கிறார். அது அவருக்குள் ஏதோ ஒன்றைச் செய்த பிறகு, அந்த அனுபவத்தையே நம்மிடம் பரிமாறுகிறார்.. ஒரு படைப்பாளிக்குத் தேவையான முக்கியமான பண்பு இதுதான் என்று நினைக்கிறேன். வெறும் பார்வையை மீறிய கவனிப்பு.. அனைவருமே வாசிப்பது உண்டு.. நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.. ஆனால், அனைத்தையும் உள்வாங்குகிறோமா என்றால், இல்லை.. அந்த ஒரு வேறுபாடுதான் ஒரு படைப்பாளிக்கும், சாமானியனுக்கும் இருக்கிறது என்று...