இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாங்வான் குறிப்புகள் #07

படம்
பியோதர் தஸ்தோவஸ்கியின் வெண்ணிற இரவுகளில் வரும் கனவுக்காரனைப் போல, இந்த வெக்கை இரவுகளில் நானும் நடக்கிறேன். அவன் நாஸ்தென்காவைத் தேடினான். நான் காற்றைத் தேடுகிறேன்.. கொரியாவில் கோடை காலம் வந்துவிட்டது.. வெப்பநிலை முப்பதிலிருந்து முப்பதைந்து வரைதான் என்றாலும், காற்றில் இருக்கும் அதீத ஈரப்பதத்தால் வியர்வை சுரப்பிகள் அழுது தீர்க்க தொடங்கிவிட்டன.. வெளியில் இப்படி என்றால், வீட்டினுள் கேட்கவே வேண்டாம்.. எட்டாவது மாடியில் கிழக்கு, மேற்கு என இரண்டு பக்கங்களிலும், மொத்தமாக நான்கு சன்னல்களுக்கு நடுவே நான் அடைந்திருப்பதால், காற்று முதலில் என் உரோமங்களுடன் கைகுளுக்கிய பின்தான் கீழிறங்கும்.. ஆனால் இன்று அந்த உரோமத்திற்கு கூட.. சாரி.. சூடான காற்றுக்கு கூட வழியில்லை.. இறுக்கமாக இருக்கிறது..  என்னதான் கேட்ஜட்களிடம் என் மனதை, முன்பணம் இல்லாமலேயே வாடகைக்கு கொடுத்திருந்தாலும், இந்த குளிரூட்டிகளை மட்டும் ஏற்கமுடியவில்லை.. காரணம், இரவில் அதன்துணையுடன் தூங்கிவிட்டு காலையில் வெளியில் வரும்பொழுது, இந்த உலகமே என்னை வெறுத்து வெப்பதை என் மேல் உமிழ்ந்து உடல்முழுவதும் நீர் கடுப்பு ஏற்படுவதுபோல் இருக்கும்.. ...

சாங்வான் குறிப்புகள் #06 (மால(ர)தாங்..)

படம்
பர்சனலைசுடு மெடிசன்- தனிப்பயனாக்கப்பட்ட மருந்து என்றொரு புது வகையொன்று வளர்ந்துவருகிறது.. இதைப்பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன்.. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அலோபதி மருந்துகள் பொதுவாக மேற்கத்தியர்களுக்கான மரபணுக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டிருப்பதால், அவற்றில் பெரும்பாலான மருந்துகள் நம்மவர்களுக்கு அதே மாதிரியான பயனை கொடுப்பதில்லை.. சில வேளைகளில் மோசமான பக்கவிளைவுகளையும் கொடுக்கவல்லது. கவனாக வாசியுங்கள்.. எங்கே கவனமாக வாசிக்கிறீர்கள்..! கவனமாக என்பதற்கு கவனாக என்று எழுதியிருந்தேன்.. சரி, இனி கவனமாக வாசியுங்கள்.. பக்கவிளைவுகள் என்று நான் குறிப்பிடுவது, பொதுவான பக்கவிளைவுகள் அல்ல, குறிப்பிட்ட மரபணு தொடரை கொண்டவர்களுக்கு ஒவ்வாமல் போவதால் வரும் பிரச்சனை. இதனை கருத்தில் கொண்டு, ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என பலர் தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகளை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்.. கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் மருந்தகத்திற்கு செல்கிறீர்கள், அங்கு உங்களுக்காகவே கொடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆதாரை காண்பிக்கிறீர்கள், அதற்கு ஏற்றவாறு ஒரு எந்திரம் உங்களுக்கான மருந்தை சுடச்சுட சம...