மலையாளம்-
உயிர்நாடி 'தாய் தமிழ்' வழியமைந்ததிராவிட மொழிகளுல்-
'பிரிந்துசென்ற பிராந்திய மொழியாயினும்',
உயர்வான, இனிமையான மொழிதான்...
ஆனால் தன் தாய்-யை
மறந்தவொரு மொழியாய் மாறிப்போனது,
காலத்தின் கட்டாயமோ- இல்லை
அரசியலின் சூழ்ச்சியோ
தெரியாது அவர்களுக்கும்...!
கட்டற்ற களஞ்சியமாய் வார்த்தைகள்
தமிழெங்கும் கொட்டிக்கிடக்க,
இவர்கள் சமஷ்கிருதம் போவதன் நோக்கம்
தெரியாது அவர்களுக்கும்....!
தமிழ் மறந்த அவர்கள்,
அவர்களுக்கு படியளக்கும் தமிழர்களையும் மறக்க-
இல்லை, இல்லை
அடக்க நினைக்கிறார்கள்...!
உங்கள் தகதகக்கும் தேநீரும்,
பளபளக்கும் தங்கமும்
பொலபொல புட்டும்
விற்பனையாக தமிழர்கள் வேண்டும்,
அன்றாட காய்கறிகள்,
உணவுபொருட்கள் தமிழகத்திலிருந்து வேண்டும்,
மின்சாரமும் வேண்டும்...!
ஆனால் தமிழன் மட்டும் வேண்டாம்!!???
முல்லை பெரியாற்றை,
நீதிமன்றம் சொன்னாலும் விடமாட்டீர்கள்...!??!
இதற்கெல்லாம் காரணம்,
தமிழகத்தில் வாழும் மலையாளி
மலையாளியாகவே வாழ்வதும்,
தமிழன் எங்கு சென்றாலும் தமிழை மறுப்பதும் தான்...
எனில்
இப்பொழுதும் தமிழர்கள் என்ன செய்யவேண்டுமென்பதை
மலையாளிகளான நீங்களே சொல்லித்தாருங்களேன்....!!
கருத்துகள்
கருத்துரையிடுக