அறிவியலாளர்களின் 'h-index'-யை எப்படி கணக்கிடுவது....?
உங்களின் மொத்த கட்டுரைகளில் (published articles), எத்தனை எண்ணிக்கையிலான உருப்படிகள், அது பெற்றுள்ள 'மேற்கோள்'களின் (citation) எண்ணிக்கைக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கறதோ, அதுவே உங்களின் h-index-ஆக அமையும்...
எடுத்துக்காட்டாக,
நீங்கள் இதுவரை 20 கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதில் 5 கட்டுரைகள் தலா 10 முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், 3 கட்டுரைகள் தலா 9 முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், 5 கட்டுரைகள் தலா ஒரு முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், மற்றவை இன்னும் மேற்கோள்கள் பெறவில்லை என்றும் வைத்துக்கொள்வோம்..,
இதில், அதிக எண்ணிக்கையிலான மேற்கோள் '10',
ஆனால் உங்கள் கட்டுரைகளில் 5 இல் மட்டுமே '10' மேற்கோள்கள் உள்ளன,
அடுத்த எண்ணான '9'-க்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் '9' மற்றும் '9' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற கட்டுரைகளின் எண்ணிக்கை '8' மட்டுமே.
எனில்,
'8'-யை எடுத்துக்கொள்வோம்,
'8' மற்றும் '8' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற கட்டுரைகளின் எண்ணிக்கையாக '8' கட்டுரைகள் உள்ளன.
எனவே உங்களின் h-index '8' ஆகும்....
அடுத்து உங்களின் h-index '9' ஆக வேண்டுமென்றால், உங்களின் '9' மற்றும் '9'க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற '8' கட்டுரைகளுடன் சேர்த்து, இன்னுமொரு கட்டுரைக்கு, '9' அல்லது '9'க்கு மேற்பட்ட மேற்கோள்கள் கிடைக்கப்பெறவேண்டும்...
கருத்துகள்
கருத்துரையிடுக