உலக மக்களுக்கு சோறிட சேற்றில் இறங்கும் விவசாயியின் தற்கொலை எதை உணர்த்துகிறது நமக்கு.... ?-ஒரு சாதாரணனின் பார்வையில்..

இதுவரை ஆட்சி செய்த அல்லது இப்பொழுது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அரசின், விவசாயியின் மீதான அக்கறை என்ன..?! ஆந்திர மாநிலத்தில், விவாசாயி ஒருவர், தன் மகன் பயிலும் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அங்கு படித்துக்கொண்டிருந்த தனது மகனை அழைத்து சென்று ஒரு தேநீரும், ரொட்டியும் வாங்கிக் கொடுத்து உண்ணசொல்லிவிட்டு, அவன் கையில் ஐந்து ரூபாயையும் கொடுத்திருக்கிறார். பின் அவனை, அந்த பள்ளியிலேயே விட்டுவிட்டு, அவனிடம் நன்றாக படிக்கவேண்டும் என அறிவுரை கூறிய அவர், எக்காரணம் கொண்டும் நான் இதுவரை செய்துகொண்டிருந்த 'விவசாய' தொழிலுக்கு வந்துவிடாதே என்று தன் விரக்தியை மகனிடம் புலம்பியிருக்கிறார். கடைசியில் அவர் தன் வீட்டிற்கு சென்று தன்னையே கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை, நம் மூளைக்கு எந்த புரிதலை கொடுக்கிறது. 
அரசின் மோசமான கொள்கைகளும், கொள்ளைகளுமா?
அரசு என்ன செய்தாலும், அவர்களுக்காய் கொடிபிடிக்கும் அப்பாவி மக்களை பற்றியா?
அடுத்து ஐந்து வருடங்கள் அவர்கள் செய்யப்போகும் கொள்கை பிடிப்பான கொள்ளைகளுக்காய், ஓட்டுக்கு பணம்பெருபவர்களைப் பற்றியா?
நடிகர், நடிகைகளுக்காய் கால்கடுக்க நின்று பேட்டி எடுக்கும் ஊடகங்கள், இதனை செய்தியாய் கூட மதிக்காது பிரசுரிக்காமல் இருப்பதைப் பற்றியா? 
இல்லை 
நம்மீது திட்டமிட்டு திணிக்கப்பட்ட,
கடவுளா? விதியா? மதமா? சாதியா?
எதுவாக இருக்க முடியும்.

கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன் மற்றும் இதர அதிபயங்கரவாத திட்டங்களை அதிபயங்கரவாத அரசு தானே முன்னின்று முனைப்பு காட்டி செயல்படுத்தும்பொழுது, அதனை கடமைக்காய் எதிர்ப்பவர்கள்ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அதனை எதிர்ப்பவர்களை பார்த்து, 'வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் தேச துரோகிகள்' என வாய் கூசாது சொல்லும் புரிதல் இல்லா மக்களே நீங்கள் பதில் சொல்லுங்கள்.... ஒருவேளை அவர் சாதாரண விவசாயிதானே, அதற்கேன் வருந்தவேண்டும் என்கிறீர்களா...?

நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், 
இப்படி சோறு போடும் விவசாயியின் இரத்தத்தில்தான் உங்களின் வளர்ச்சி உண்டென்றால் நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்களே....
இப்படியான தேசிய இனங்களின் விழிப்புணர்ச்சியை தவறென்று மட்டம் தட்டும், இந்திய தேசிய 'வியாதி'களான உங்களுக்கு, நாங்கள் (தேச)விரோதிகளே...

தேசிய இனங்களின் விடுதலை மிக அவசியம்.
சுவரின்றி சித்திரமில்லை, தேசியமின்றி மக்களுக்கான வளர்ச்சியும் இங்கில்லை...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2