இடுகைகள்

அறிவியலாளர்களின் 'h-index'-யை எப்படி கணக்கிடுவது....? உங்களின் மொத்த கட்டுரைகளில் (published articles), எத்தனை எண்ணிக்கையிலான உருப்படிகள், அது பெற்றுள்ள 'மேற்கோள்'களின் (citation) எண்ணிக்கைக்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கறதோ, அதுவே உங்களின் h-index-ஆக அமையும்... எடுத்துக்காட்டாக, நீங்கள் இதுவரை 20 கட்டுரைகளை பிரசுரித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதில் 5 கட்டுரைகள் தலா 10 முறை மேற ்கோள்கள் பெற்றதாகவும், 3 கட்டுரைகள் தலா 9 முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், 5 கட்டுரைகள் தலா ஒரு முறை மேற்கோள்கள் பெற்றதாகவும், மற்றவை இன்னும் மேற்கோள்கள் பெறவில்லை என்றும் வைத்துக்கொள்வோம்.., இதில், அதிக எண்ணிக்கையிலான மேற்கோள் '10', ஆனால் உங்கள் கட்டுரைகளில் 5 இல் மட்டுமே '10' மேற்கோள்கள் உள்ளன, அடுத்த எண்ணான '9'-க்கும் வாய்ப்பில்லை, ஏனெனில் '9' மற்றும் '9' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற்ற கட்டுரைகளின் எண்ணிக்கை '8' மட்டுமே. எனில், '8'-யை எடுத்துக்கொள்வோம், '8' மற்றும் '8' க்கு மேற்பட்ட மேற்கோள்கள் பெற...
தேவை, கனவான அவலம்... -தமிழீழம், தமிழர்களின் கனவாய் மாறும் அவலம் -இறந்த லட்சகணக்கான தமிழர்களுக்கு ஞாயம் கிடையாது -மீனவர்கள் விவகாரத்திலும் தமிழர்களுக்கு எதிரான அணுகுமுறை -மலையாளிகளுக்கு தமிழனிடமிருந்து மின்சாரம் வேண்டும், உணவு வேண்டும், தன் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வேண்டும். ஆனால் தமிழனுக்கு தண்ணீர் மட்டும் கிடையாது -கர்நாடகாவிலிருந்து காவிரிக்கு சொட்டு தண்ணீரும் பெறமுடியாது -மீத்தேன், அணுஉலை, நியூட்ரினோ, இன்னும் பல சுடுகாடுகளை தமிழன் தலையில் கட்டும் திட்டம் -தமிழின் தொன்மத்தையும், அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளையும் உலகநாடுகளுக்கும், ஏன் தமிழர்களிடையேயே மறைக்கும் ஹிந்தி(இந்திய) வெறியர்கள், இதற்கிடையே ஹிந்தி திணிப்பு வேறு...!! இதற்கெல்லாம் தீர்வு- நமக்கான தனி தாய்தமிழ் தேசம்... எல்லா சிறப்புகளும், தேவைகளும் இருந்தும் தனி தமிழ்தேசியம் கனவாகவே மாறிப்போனதன் காரணம், தமிழ் இன-உணர்வாளர்களை விட இங்கு இன-துரோகிகள் அதிகமாய் முளைத்து, வளர்ந்து, காடாகியிருப்பதே...!! அவர்களை முளையிலேயே அழிக்காமல் விட்டது தமிழர்களின் பெருந்தன்மை...! -ஆனால் என்ன செய்ய, இப்போழுது அந்த பெரு...
படம்
மாடு கூறும் நல்லுலகு  கெடச்ச புல்ல   மேஞ்சிகிட்டு  கெடச்ச எடத்துல   சாஞ்சிபுட்டு  கெடச்சமுட்டும்  தண்ணிய குடிச்சுபுட்டு  என்னிய முதல்ல   புடிச்ச பயலுக்கு  வயலுல  வேலையும்  செஞ்சு கொடுப்பேன்  கூலியில்லாம...! இப்ப  அவன் என்னிய  சொந்தமாக்கி  தின்னுவைக்க  வைக்கோலுன்னு  ஒன்ன கொடுக்குறான்... அதில் ஒர (உரம்)  நாத்தம்    நல்லா அடிக்குதே தவிர  நல்ல உணவு வாசம்  கிட்டல.... உண்ணவும் முடியல  முக்கி முக்கி  முழுங்கினாலும்  அசபோடவும்   முடியல...! பண்பாடு, கலாச்சாரமெனமுரைக்கும்  அதிமேதாவிக   இனியாவது  ஒரத்த கொட்டி  மண்ணையு என்னையு  சாகடிக்காது நம்ம குலசாமி   நம்மாழ்வார்  சொன்னபடி சாகுபடிய இயற்கையா  செஞ்சு  அந்த வைக்கோல   என் தொழுவத்துல  கொண்டு சேத்தின்னா .. உனக்கு கோடான,...
படம்
என் மொழி உறைந்து கிடந்த  'ice age' உலகில்  உரையாடல் நடக்க  இயற்கை கொடுத்த மொழி  என் மொழி! அக-புற உணர்வு  காம காரியத்திற்கும்,  அதன் பலன் இனவிருத்திக்கும்  என்றெண்ணிய உலகிற்கு  வாழ்வியலை  கற்றுக்கொடுத்தது  என் மொழி! காதலை  உரைத்தால்  கல்லையும் உயிர்ப்பிக்கும்  வல்லமையுண்டு   என் மொழிக்கு! அப்படிப்பட்ட  என் மொழியை  இயற்கை போற்றுவதாலோ என்னவோ  செயற்கை தேசங்கள்  தூற்றுகின்றது! தூற்றட்டும், தூற்றட்டும்  தமிழால் வாழும்  அத்துரோகிகளுக்கென்ன தெரியும்  தமிழுக்காய் வாழும்  உண்மைத்தமிழர்களைப்பற்றி....! அழிவில் பாதி  அக்கூடா நட்பு கொண்ட  கேடால்! மீதபாதி  கடல் கொண்ட நட்பால்! இருந்தும் உயிர்ப்பிக்கும்  ஒருசில  என் மொழித்துகள்கள் உலகையும் விஞ்சும்...! வெகுவிரைவில்...! இணைய நண்பர்களுக்கு என்னுடைய தாய்த்தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! sakthi
படம்
நம்மாழ்வார் (நம்'ஆள்வர்') அச்சமில்லா அறிவார்ந்த செந்தமிழ் குறளுக்கும்  வெண்ணிற தாடை முடிக்கும் உரியவரே... இயற்கையையும் இயற்கை போற்றும் எம்மினத்தையும்- காக்க இயற்கை நல்கிய இனியவரே... எம்மைப்பார்த்து சொல்லுங்களேன், இனி யாரிடம் கற்றுக்கொள்ள இந்த மானுட மேலாண்மையையும்.. இயற்கை வேளாண்மையையும் ..! கடனுக்காய் வாழ்பவர் மத்தியில் தான் பெற்ற கடனுக்காய் தன்னையும் மாய்க்கத் துணியும் எம்மின வேளாண் மக்களுக்கு நெஞ்சுரமிட்ட ஒற்றைநம்பிக்கையும் மண்ணுக்கு உரமாகிப்போனதே...! முதலில் நீ விளையாண்டு திரிந்த சோளக்கொல்லையை இழந்தோம்! நீ உண்டு மகிழ்ந்த நாவற்பழங்கள் நல்கும் மரத்தையிழந்தோம்! பின் மண்ணையுமிழந்தோம்! - இன்று உன்னையும் இழக்கிறோமே..! அங்கே இந்திய ஏகாதிபத்திய பரம்பரைக்கும்பல்  குதூகலிக்கிறார்கள் ...! எமக்கோ மீளமுடியா துக்கம் நெஞ்சடைத்து, கண்பிளந்து அமிலமழை பொழிகின்றதே...! கேளுங்கள் குதூகலிக்கும் மடையர்களே........ யாம் அவரை இழந்தாலும் அவர் எம்முள் விதைத்த 'சிந்தனை' வீரியமாய் வளர்கிறது பாருங்கள்..., மண்ணை முறித...

வீரமரணமென்பதென்ன!!??

படம்
வீரமரணமென்பதென்ன!!?? வெல்வது மட்டுமே வீரமென்றால் இப்புவியில் 'ஆக்கவும், அழிக்கவும்' இயலா 'ஆற்றல்' மட்டுமே வீரமாகும்...! ஏனெனில் மரணமே உடல், உயிருடன் தோற்பதுதானே..! எனில் தோற்பதும் வீரமே! "தம் வாழ்வில் நேர்மையாய் கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்து துய்த்த அனைவரும் எய்துவது வீரமரணமேயன்றி வேறில்லை..!!" தோல்வியால் ஏற்பட்ட அழிவும், வலியும் போராட்ட வழியை மாற்றி 'முன்னுரை' கொடுக்குமேயன்றி ஒருபொழுதும் 'முற்றுப்புள்ளியாகிவிடாது...!' நம் போராட்டம் வெல்லும்வரையில் தோல்விகளென்ற வெற்றி படிகள் நம்மை வழிநடத்தும்...! அப்படிகளில் ஒன்றான 'அன்ரன் பாலசிங்கத்தின்' வீரமரண-நாளை நினைத்து முன்னேறிச்செல்வோம்...!
படம்
பாடல்: எம்மின் நீவிரே..! துறை: மன்னன் (தலைவர்) மாண்பு பற்றி ஒரு கடைநிலைத் தமிழன் பாட்டுடைத் தலைவன்: எம்மினத்தலைவர் 'பிரபாகரன்' ஓவியம் மற்றும் கவிதை: சக்திவேல் எம்மின் நீவிரே..! தாய்த்-தமிழ் பால் கொண்ட எம்மின் உணர்வுக்கும் பெற்ற-தலைவன் பால் கொண்ட எம்மின் அன்புக்கும்  உண்டான 'காதல்' இவ்வோவியக்கவி...! கவியோவியமும் கூட...! எம்மின் நீவிரே..! எம்மின் அழகுதமிழில் காவியம் படைத்த கம்பனும் எம்மின் வீரம் சொன்ன புறப்பாட்டும் எம்மின் காதல் சொன்ன அகப்பாட்டும் தமிழுக்கிட்ட உயரத்தையும் விஞ்சிய உயரமிட்டவன்  நீவிர்....! எம்மின் நீவிரே..! எம்மின் நீவிரே..! எம்மின் அடையாளம் இந்தியனென உலகம் முத்திரையிட எம்மை தமிழனென உலகமறியச்- செய்தவன் நீவிர்...! எம்மின் நீவிரே..! எம்மின் நீவிரே..! எம்மின் கலையும், பண்பாடும் இந்தியன் அழிக்கும் தருணம் எம்மை தலைநிமிர்த்தி, பண்படுத்தி எமக்கு நெஞ்சுரமிட்டு போராட வைத்தவனும் நீவிர்...! எம்மின் நீவிரே..! எம்மின் நீவிரே..! உலகம் ஆண்ட யாம் ஊரின்றி தவித்ததனால்  உலகம் வியக்க எமக்கு ஊர் பெற உன்குடும்பம் இழந்தாயோ! எம்மின் நீ...