பாடல்: எம்மின் நீவிரே..!
துறை: மன்னன் (தலைவர்) மாண்பு பற்றி ஒரு கடைநிலைத் தமிழன்
பாட்டுடைத் தலைவன்: எம்மினத்தலைவர் 'பிரபாகரன்'
ஓவியம் மற்றும் கவிதை: சக்திவேல்

எம்மின் நீவிரே..!
தாய்த்-தமிழ் பால் கொண்ட
எம்மின் உணர்வுக்கும்
பெற்ற-தலைவன் பால் கொண்ட
எம்மின் அன்புக்கும் 
உண்டான 'காதல்'
இவ்வோவியக்கவி...!
கவியோவியமும் கூட...!

எம்மின் நீவிரே..!
எம்மின்
அழகுதமிழில் காவியம்
படைத்த கம்பனும்
எம்மின்
வீரம் சொன்ன புறப்பாட்டும்
எம்மின்
காதல் சொன்ன அகப்பாட்டும்
தமிழுக்கிட்ட
உயரத்தையும்
விஞ்சிய உயரமிட்டவன் 
நீவிர்....!
எம்மின் நீவிரே..!

எம்மின் நீவிரே..!
எம்மின் அடையாளம்
இந்தியனென
உலகம் முத்திரையிட
எம்மை தமிழனென
உலகமறியச்-
செய்தவன்
நீவிர்...!
எம்மின் நீவிரே..!

எம்மின் நீவிரே..!
எம்மின் கலையும், பண்பாடும்
இந்தியன் அழிக்கும் தருணம்
எம்மை தலைநிமிர்த்தி, பண்படுத்தி
எமக்கு நெஞ்சுரமிட்டு
போராட வைத்தவனும்
நீவிர்...!
எம்மின் நீவிரே..!

எம்மின் நீவிரே..!
உலகம் ஆண்ட
யாம்
ஊரின்றி தவித்ததனால் 
உலகம் வியக்க
எமக்கு
ஊர் பெற
உன்குடும்பம் இழந்தாயோ!
எம்மின் நீவிரே..!

எம்மின் நீவிரே..!
நீ உன் குடும்பம்
இழந்தாலும்
ஒருவேளை
யாம் உன்னை இழந்திருந்தாலும்!
நீ எங்களுக்கிட்டுச்சென்ற
வீர-அடையாளமிருக்க 
எமக்கென்ன அச்சம்..!
அஞ்சவேண்டியவன்
யாமில்லை
பகைவனும், துரோகியும்...!
எம்மின் நீவிரே..!

எம்மின் நீவிரே..!
ஈழத்தந்தை 'செல்வா'
தமிழ் தேசியத்தின் தந்தை
'நீவிர்'...!
ஆம்
இந்திய-ஏகாதிபத்தியத்திலிருந்து
தமிழ் தேசியம் 
மலரும் நாள்
வெகுதூரமில்லை....!
இதுவும்
நீவிர் கொடுத்த
உந்துதலே...!
எம்மின் நீவிரே..!
அன்புடன்
சக்தி....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2