என் மொழி
உறைந்து கிடந்த 
'ice age' உலகில் 
உரையாடல் நடக்க 
இயற்கை கொடுத்த மொழி 
என் மொழி!
அக-புற உணர்வு 
காம காரியத்திற்கும், 
அதன் பலன் இனவிருத்திக்கும் 
என்றெண்ணிய உலகிற்கு 
வாழ்வியலை 
கற்றுக்கொடுத்தது 
என் மொழி!

காதலை 
உரைத்தால் 
கல்லையும் உயிர்ப்பிக்கும் 
வல்லமையுண்டு  
என் மொழிக்கு!

அப்படிப்பட்ட 
என் மொழியை 
இயற்கை போற்றுவதாலோ என்னவோ 
செயற்கை தேசங்கள் 
தூற்றுகின்றது!

தூற்றட்டும், தூற்றட்டும் 
தமிழால் வாழும் 
அத்துரோகிகளுக்கென்ன தெரியும் 
தமிழுக்காய் வாழும் 
உண்மைத்தமிழர்களைப்பற்றி....!

அழிவில் பாதி 
அக்கூடா நட்பு கொண்ட 
கேடால்!
மீதபாதி 
கடல் கொண்ட நட்பால்!

இருந்தும் உயிர்ப்பிக்கும் 
ஒருசில 
என் மொழித்துகள்கள்
உலகையும் விஞ்சும்...!
வெகுவிரைவில்...!

இணைய நண்பர்களுக்கு என்னுடைய
தாய்த்தமிழர் திருநாள் வாழ்த்துகள்..!
sakthi

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2