வீரமரணமென்பதென்ன!!??

வீரமரணமென்பதென்ன!!??
வெல்வது மட்டுமே வீரமென்றால்
இப்புவியில் 'ஆக்கவும், அழிக்கவும்' இயலா
'ஆற்றல்' மட்டுமே வீரமாகும்...!
ஏனெனில்
மரணமே உடல், உயிருடன்
தோற்பதுதானே..!

எனில்
தோற்பதும் வீரமே!
"தம் வாழ்வில் நேர்மையாய்
கொள்கைப்பிடிப்புடன்
வாழ்ந்து துய்த்த அனைவரும்
எய்துவது
வீரமரணமேயன்றி வேறில்லை..!!"

தோல்வியால் ஏற்பட்ட
அழிவும், வலியும்
போராட்ட வழியை மாற்றி
'முன்னுரை' கொடுக்குமேயன்றி
ஒருபொழுதும் 'முற்றுப்புள்ளியாகிவிடாது...!'

நம் போராட்டம்
வெல்லும்வரையில்
தோல்விகளென்ற
வெற்றி படிகள் நம்மை வழிநடத்தும்...!

அப்படிகளில் ஒன்றான
'அன்ரன் பாலசிங்கத்தின்'
வீரமரண-நாளை நினைத்து
முன்னேறிச்செல்வோம்...!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2