நம்மாழ்வார் (நம்'ஆள்வர்')


அச்சமில்லா அறிவார்ந்த
செந்தமிழ் குறளுக்கும் 
வெண்ணிற தாடை முடிக்கும்
உரியவரே...

இயற்கையையும்
இயற்கை போற்றும் எம்மினத்தையும்- காக்க
இயற்கை நல்கிய
இனியவரே...

எம்மைப்பார்த்து
சொல்லுங்களேன்,
இனி யாரிடம்
கற்றுக்கொள்ள
இந்த மானுட மேலாண்மையையும்..
இயற்கை வேளாண்மையையும் ..!

கடனுக்காய் வாழ்பவர் மத்தியில்
தான் பெற்ற
கடனுக்காய் தன்னையும்
மாய்க்கத் துணியும்
எம்மின வேளாண் மக்களுக்கு
நெஞ்சுரமிட்ட ஒற்றைநம்பிக்கையும்
மண்ணுக்கு உரமாகிப்போனதே...!

முதலில்
நீ விளையாண்டு திரிந்த
சோளக்கொல்லையை இழந்தோம்!
நீ உண்டு மகிழ்ந்த நாவற்பழங்கள்
நல்கும் மரத்தையிழந்தோம்!
பின் மண்ணையுமிழந்தோம்! - இன்று
உன்னையும் இழக்கிறோமே..!

அங்கே
இந்திய ஏகாதிபத்திய பரம்பரைக்கும்பல் 
குதூகலிக்கிறார்கள் ...!
எமக்கோ
மீளமுடியா துக்கம்
நெஞ்சடைத்து, கண்பிளந்து
அமிலமழை பொழிகின்றதே...!

கேளுங்கள்
குதூகலிக்கும் மடையர்களே........
யாம் அவரை இழந்தாலும்
அவர் எம்முள் விதைத்த
'சிந்தனை' வீரியமாய் வளர்கிறது
பாருங்கள்...,
மண்ணை முறித்து வளரும்
மரத்தைப்போல்
அவரின் சிந்தனை,
உன்னின் சட்ட, சம்பிரதாயங்களை
முறித்து வளரும்...! முறியடிக்க வளரும்...!
அதுவரை நீங்கள் மட்டுமே 
வாழ்ந்துவிட்டு போங்கள்
மடையர்களே....!
sakthi 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #17