எது தமிழுக்கழகு!!??

ஆகா என்னவொரு இனமிது...!
உலகினிற் கண்டிராத
முட்டாளினமோ இது!

பாண்டிய பரம்பரையில்
பண்பட்டு,
சேர, சோழன் வழிதொட்டு
தொன்றுதொட்டு
அகம், புறம்
இணைத்து வாழ்ந்த
இனமிதுவா!!??

நெல்லுசோறுப் படையலிட்டு
வேற்றுமொழியினூடே
வேற்றினத்தை நாங்கள்
தொழோமென்று,
இயற்கையே எங்கள்
இறையென
வழிபட்ட இனமிதுவா!!??

அதேஇனமென்றின்- 
தம்மின வேந்தன்
இறப்பைத் தம்மினமே
கொண்டாடுவதை
என்சொல்லி நியாப்படுத்த..!!??

இல்லையேல்
அப்படியொரு இனமிருப்பதைத்தான்
உலகத்தார் அறிவனரோ!!??

அறியவில்லையாயின்-
துரோகிகளை அதிகமாய் 
தன்னகத்தே கொண்ட
தமிழினத்தைக் காண்கச் சொல்லும்...!!
அந்தொரு முட்டாளினம்தான்
தன்னின மூத்தவன்
செங்கோலன்- இராவணன்
இறப்பை
விமர்சயாய்க் கொண்டாடும்
பச்சைத் துரோகிகள்...!

இவர்கள் இருப்பதுடன்
மாண்டுபோவது
தமிழுக்கழகு-என்பான்
தமிழ்ப் பெருமையறிந்த
உலகத்தவன்...!!!

கருத்துகள்

  1. அழகான/நேர்மையான துவக்கம்! வாழ்த்துக்கள்:)

    "இயற்கை இறை" சொல்லும் இக்கவிதை அழகு!
    இதனினும் "தமிழ்ப் பெண்" = தசையல்ல, விசை என்ற சென்ற கவிதை அழகோ அழகு!:)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #18

விளையாட்டாக சொல்கிறேன் #10