நம்மாழ்வார் (நம்'ஆள்வர்') அச்சமில்லா அறிவார்ந்த செந்தமிழ் குறளுக்கும் வெண்ணிற தாடை முடிக்கும் உரியவரே... இயற்கையையும் இயற்கை போற்றும் எம்மினத்தையும்- காக்க இயற்கை நல்கிய இனியவரே... எம்மைப்பார்த்து சொல்லுங்களேன், இனி யாரிடம் கற்றுக்கொள்ள இந்த மானுட மேலாண்மையையும்.. இயற்கை வேளாண்மையையும் ..! கடனுக்காய் வாழ்பவர் மத்தியில் தான் பெற்ற கடனுக்காய் தன்னையும் மாய்க்கத் துணியும் எம்மின வேளாண் மக்களுக்கு நெஞ்சுரமிட்ட ஒற்றைநம்பிக்கையும் மண்ணுக்கு உரமாகிப்போனதே...! முதலில் நீ விளையாண்டு திரிந்த சோளக்கொல்லையை இழந்தோம்! நீ உண்டு மகிழ்ந்த நாவற்பழங்கள் நல்கும் மரத்தையிழந்தோம்! பின் மண்ணையுமிழந்தோம்! - இன்று உன்னையும் இழக்கிறோமே..! அங்கே இந்திய ஏகாதிபத்திய பரம்பரைக்கும்பல் குதூகலிக்கிறார்கள் ...! எமக்கோ மீளமுடியா துக்கம் நெஞ்சடைத்து, கண்பிளந்து அமிலமழை பொழிகின்றதே...! கேளுங்கள் குதூகலிக்கும் மடையர்களே........ யாம் அவரை இழந்தாலும் அவர் எம்முள் விதைத்த 'சிந்தனை' வீரியமாய் வளர்கிறது பாருங்கள்..., மண்ணை முறித...
இடுகைகள்
2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
வீரமரணமென்பதென்ன!!??
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வீரமரணமென்பதென்ன!!?? வெல்வது மட்டுமே வீரமென்றால் இப்புவியில் 'ஆக்கவும், அழிக்கவும்' இயலா 'ஆற்றல்' மட்டுமே வீரமாகும்...! ஏனெனில் மரணமே உடல், உயிருடன் தோற்பதுதானே..! எனில் தோற்பதும் வீரமே! "தம் வாழ்வில் நேர்மையாய் கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்து துய்த்த அனைவரும் எய்துவது வீரமரணமேயன்றி வேறில்லை..!!" தோல்வியால் ஏற்பட்ட அழிவும், வலியும் போராட்ட வழியை மாற்றி 'முன்னுரை' கொடுக்குமேயன்றி ஒருபொழுதும் 'முற்றுப்புள்ளியாகிவிடாது...!' நம் போராட்டம் வெல்லும்வரையில் தோல்விகளென்ற வெற்றி படிகள் நம்மை வழிநடத்தும்...! அப்படிகளில் ஒன்றான 'அன்ரன் பாலசிங்கத்தின்' வீரமரண-நாளை நினைத்து முன்னேறிச்செல்வோம்...!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பாடல்: எம்மின் நீவிரே..! துறை: மன்னன் (தலைவர்) மாண்பு பற்றி ஒரு கடைநிலைத் தமிழன் பாட்டுடைத் தலைவன்: எம்மினத்தலைவர் 'பிரபாகரன்' ஓவியம் மற்றும் கவிதை: சக்திவேல் எம்மின் நீவிரே..! தாய்த்-தமிழ் பால் கொண்ட எம்மின் உணர்வுக்கும் பெற்ற-தலைவன் பால் கொண்ட எம்மின் அன்புக்கும் உண்டான 'காதல்' இவ்வோவியக்கவி...! கவியோவியமும் கூட...! எம்மின் நீவிரே..! எம்மின் அழகுதமிழில் காவியம் படைத்த கம்பனும் எம்மின் வீரம் சொன்ன புறப்பாட்டும் எம்மின் காதல் சொன்ன அகப்பாட்டும் தமிழுக்கிட்ட உயரத்தையும் விஞ்சிய உயரமிட்டவன் நீவிர்....! எம்மின் நீவிரே..! எம்மின் நீவிரே..! எம்மின் அடையாளம் இந்தியனென உலகம் முத்திரையிட எம்மை தமிழனென உலகமறியச்- செய்தவன் நீவிர்...! எம்மின் நீவிரே..! எம்மின் நீவிரே..! எம்மின் கலையும், பண்பாடும் இந்தியன் அழிக்கும் தருணம் எம்மை தலைநிமிர்த்தி, பண்படுத்தி எமக்கு நெஞ்சுரமிட்டு போராட வைத்தவனும் நீவிர்...! எம்மின் நீவிரே..! எம்மின் நீவிரே..! உலகம் ஆண்ட யாம் ஊரின்றி தவித்ததனால் உலகம் வியக்க எமக்கு ஊர் பெற உன்குடும்பம் இழந்தாயோ! எம்மின் நீ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
எது தமிழுக்கழகு!!?? ஆகா என்னவொரு இனமிது...! உலகினிற் கண்டிராத முட்டாளினமோ இது! பாண்டிய பரம்பரையில் பண்பட்டு, சேர, சோழன் வழிதொட்டு தொன்றுதொட்டு அகம், புறம் இணைத்து வாழ்ந்த இனமிதுவா!!?? நெல்லுசோறுப் படையலிட்டு வேற்றுமொழியினூடே வேற்றினத்தை நாங்கள் தொழோமென்று, இயற்கையே எங்கள் இறையென வழிபட்ட இனமிதுவா!!?? அதேஇனமென்றின்- தம்மின வேந்தன் இறப்பைத் தம்மினமே கொண்டாடுவதை என்சொல்லி நியாப்படுத்த..!!?? இல்லையேல் அப்படியொரு இனமிருப்பதைத்தான் உலகத்தார் அறிவனரோ!!?? அறியவில்லையாயின்- துரோகிகளை அதிகமாய் தன்னகத்தே கொண்ட தமிழினத்தைக் காண்கச் சொல்லும்...!! அந்தொரு முட்டாளினம்தான் தன்னின மூத்தவன் செங்கோலன்- இராவணன் இறப்பை விமர்சயாய்க் கொண்டாடும் பச்சைத் துரோகிகள்...! இவர்கள் இருப்பதுடன் மாண்டுபோவது தமிழுக்கழகு-என்பான் தமிழ்ப் பெருமையறிந்த உலகத்தவன்...!!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கடைசி காற்றில் கரையும் கடைசி உயிர்!!! தொழிற்சாலை கழிவுகொண்டு ஓசோனை ஓட்டையிட்டும் மழைத்துளி கீழ்விழுந்தபாடில்லை! எதிரி, உயிர்வாயு உறிஞ்சும் வேதிஆயுதம் புரியாமலும்-இங்கு காற்றில் உயிர்வாயுமில்லை அதே கழிவுகளால்! உலகப்போர் வினையூக்கியாம் 'நீராதாரம்'மும் இல்லை அந்நீரோடையிருந்த ஆதாரமுமில்லை மணல்கொள்ளையர்களால்! மிகச்சிறிய அணுவையும் கடைந்து கிடைத்த மின்சாரமோ போதவில்லை மருத்துவமனைகளுக்கே! அதிலெஞ்சிய உயிர்களுக்கோ இறப்பு உண்டு இலவசமாய் விஞ்ஞானஅரசியல் உற்பத்தி செய்த அணுக்கழிவுகளால்! எனில் முடங்கிப்போனது மனிதனின் இயக்கம்! ஏன் தொழிற்சாலையின் இயக்கமும்! வேலையிழந்த தொழிலாளர்கள் நடத்துகின்றனர் 'சாகும்வரை பட்டினிப்போராட்டத்தை!' உணவின்மையால்! அப்படியிருக்க, 'உனக்கெப்படி கிட்டும் நாவற்பழம்' என, இரைதேடி வந்து மரிக்கப்போகும் கடைசி சிட்டுக்குருவியிடம் வாழ்விழந்து மரித்துக்கொண்டிருக்கும் நாவமர-பச்சயத்தொழிலாளர்களில் ஓன்று வினவுகிறது!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பசுமை புரட்சி பசுமை புரட்சி?! நீர் விஷமானது! சுவை மறந்தன கனிகள்! கனிக்க மறந்தன காய்கள்! காய்க்க மறந்தன மொட்டுகள்! மொட்டுவிட மறந்தன மரங்கள்! மரம் மறந்தன வளர்ச்சியை! நிலங்கள் மறந்தன விளைச்சலை! விளைநிலம் விலையானது விளைவு மனிதாபிமானம் மறந்தாம் மனிதன்!! நன்றி பசுமை புரட்சிக்கு நன்றி!! விளைநிலம் பல்லடுக்கு இதழ்கள் அதனுள் அமர ஏதுவாயொரு நீண்டநெடிய மகரந்தம்... அதுவே பூச்சிகளின் சிம்மாசனம்! தேனெடுக்கும் சாக்கில் மகரந்த சேர்க்கையினூடே அச்செடியின் அடுத்த தலைமுறைக்கு வித்திடுகிறது தன்னலத்திலும், செடியின் நலம் பேணும் குறையறிவு கும்பிகள்! ஆனால் ஆறறிவு அம்பிகள் துடிக்கின்றனர் அந்த பூச்சிகளைக் கொள்ள விளைவு- மகசூல் மறக்கின்றன செடிகள் மலடென்று முத்திரையிட்டு விளைநிலம் விலையாகிறது உணவு கேள்விக்கு உரியதாகிறது!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தமிழ், தமிழன், தமிழின் வரலாறு: தமிழ்: இசைக்கு ஒரு மொழி இசைக்கும் ஒரே மொழி கற்காலத்திலும், தற்காலத்திலும் மானுடன் விழிகண்ட ஒரே பொற்கிழி! தமிழன்: தலைவனிழந்து தறுதலையிடம் தலைதாழ்ந்த ஒரே தமையன்! முன்னவன் சாமானியனாயினும் தேகம் மண்ணுண்டதும் நடுகல்லென கடவுளாக்கப்பட்டவன், பின்னவன் வாகை சூடியவனாயினும் வாடைக்கடவுளுக்கும் வெண்நூல் மாக்களின் சாதிக்கும், மதத்திற்கும் இரையாக்கப்பட்டவன்! தமிழின் வரலாறு: பதிவுகளற்ற படிமங்களின் எச்சங்கள்! மலையாளிக்கு அது ஒரு திரிப்புக்குள்ளாகும் தின்பண்டங்கள்! பாரதத்திற்கு அது ஒரு மறைக்கப்படவேண்டிய மந்திரங்கள்! உலகிற்கு அது ஒரு உற்றுநோக்கப்பெறா உண்மைகள்! தமிழனுக்கு அது ஒரு மறக்கப்படவேண்டிய மதிப்புகள்! எனவேதான் தமிழன் மதிப்பையும் அடையாளத்தையும் இழந்த அகதிகள் என்றானான்! தமிழனும், தமிழும் எழ வேண்டும்!!!