டோரதி.. Dorothy..
டோரதி… டோரதி திரைப்படத்தைப் பற்றி எழுதவேண்டிய பெரும்பாலானவற்றை அனைவரும் எழுதிவிட்டார்கள்.. படத்தின் கதை, நடிப்பு, இளையராஜா அவர்களின் இசை, இறுதிக்காட்சி, அது பேசும் பாலின அடையாளம், நட்பு, காதல், குடும்பம், சாதி, வன்முறை.. என ஒவ்வொரு கோணத்திலும் விவாதங்கள் நடந்துவிட்டன.. அதனால் நான் படத்தைப் பற்றிப் புதிதாக ஒன்றும் எழுதப்போவதில்லை.. ஆனால் ஒரு படைப்பாக, இந்தத் திரைப்படம் தமிழ் மக்களின் ரசனையையும் உரையாடலையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது என்று நினைக்கிறேன்.. ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகும்பொழுது, அதன் மீதான பொதுமக்களின் உண்மையான பார்வையை அறிந்துகொள்ள முடிவதில்லை.. திரையரங்கிற்குச் செல்பவர்கள் அனைவரும் ஒரே வகையான மக்கள் அல்ல என்றாலும், படம் வெளியாகும் முதல் சில நாட்களில் (காட்சிகளில்..) ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டம், விளம்பரம், சமூக வலைத்தளபடை (சோ கால்டு மாஃபியா..) ஆகியவை அந்தப் படத்தைப் பற்றிய முதல் பிம்பத்தை உருவாக்கிவிடுகின்றன.. ஒரு திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதைக்கூட பல நேரங்களில் படம் பார்த்தவர்கள் முடிவு செய்வதற்கு முன்பாகவே, படம் பார்க்காதவர்கள் முடிவுசெய்துவி...