சாங்வான் குறிப்புகள் #06 (மால(ர)தாங்..)
பர்சனலைசுடு மெடிசன்- தனிப்பயனாக்கப்பட்ட மருந்து என்றொரு புது வகையொன்று வளர்ந்துவருகிறது.. இதைப்பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன்.. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், அலோபதி மருந்துகள் பொதுவாக மேற்கத்தியர்களுக்கான மரபணுக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டிருப்பதால், அவற்றில் பெரும்பாலான மருந்துகள் நம்மவர்களுக்கு அதே மாதிரியான பயனை கொடுப்பதில்லை.. சில வேளைகளில் மோசமான பக்கவிளைவுகளையும் கொடுக்கவல்லது. கவனாக வாசியுங்கள்..
எங்கே கவனமாக வாசிக்கிறீர்கள்..! கவனமாக என்பதற்கு கவனாக என்று எழுதியிருந்தேன்.. சரி, இனி கவனமாக வாசியுங்கள்..
பக்கவிளைவுகள் என்று நான் குறிப்பிடுவது, பொதுவான பக்கவிளைவுகள் அல்ல, குறிப்பிட்ட மரபணு தொடரை கொண்டவர்களுக்கு ஒவ்வாமல் போவதால் வரும் பிரச்சனை.
இதனை கருத்தில் கொண்டு, ஆய்வாளர்கள், மருத்துவர்கள் என பலர் தனிப்பயனாக்கப்பட்ட மருந்துகளை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறார்கள்.. கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் மருந்தகத்திற்கு செல்கிறீர்கள், அங்கு உங்களுக்காகவே கொடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆதாரை காண்பிக்கிறீர்கள், அதற்கு ஏற்றவாறு ஒரு எந்திரம் உங்களுக்கான மருந்தை சுடச்சுட சமைத்துகொடுக்கிறது.. எப்படி இருக்கும்.. இதற்கு நம்முடைய மரபணு முழுவதும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆராயப்படவேண்டும்..
இந்திய மரபணு என்பது ஒரு மிஸ்டீரியஸ் ஆப்ஜக்ட்.. பல கலப்புகளும், பல கலப்பின்றியும் என ஏகத்திற்கு இயற்கையே குழம்பி ஞைஞை என கும்மியடிக்கும் நிலையில் இருக்கிறது.. (இதே போல் இன்னும் சில நூறு ஆண்டுகள் தொடர்ந்தால், பரிணாம வளர்ச்சியடைந்து, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு நிற கயிறு என்று பிறக்கும் குழந்தையின் கையில் அக்கயிறை கட்டியே பிறக்கும்படி இயற்கை செய்துவிடும்.. ஒரு கற்பனைக்கு..)
அறுந்து வீழட்டும் அக்கயிறு..
இது ஒரு புறம் இருக்கட்டும்..
நான் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தைப்பற்றி கூறும் காரணம், மருத்துவத்திற்கே அப்படி என்றால், உணவில் நாம் ஏன் அந்த தனிப்பயனாக்கல் முறையை கொண்டுவரக்கூடாது என்ற வியத்தகு சிந்தனையை உதிர்க்கத்தான்..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணவு பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். அதனால் எல்லாவற்றையும் ஃபப்வேயில் (பயப்படாதீர்கள், கெட்டவார்த்தையல்ல.. buffetதான்) வைக்காலம், அதில் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்பது வழமையான நடைமுறை.. ஆனால் நான் சொல்வது பர்சனலைசிடு ஃபுட்.. ஏதேனும் முன்பே அப்படி இருக்கிறதோ என்னவோ, தெரியாமல் கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்..
கொரியாவில் மால(ர)தாங் என்றொரு உணவு இருக்கிறது.. அது ஒருவகையில், தனிப்பயனாக்கப்பட்ட உணவுதான். அங்கு வரிசையாக காய்கறிகள், காளான், இறைச்சி, இலை தழைகள், வேர்கள் என வைக்கப்பட்டிருக்கும், நமக்கு தேவையானவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, அங்கிருக்கும் அன்பு அஜ்ஜுமாக்களிடம் (கொரிய அத்தைகள் - அன்பே உருவானவர்கள்) கொடுத்துவிட்டால், அவர்கள் அதில் எலும்பு வேகவைத்த குழம்பை (ப்ராத் - broth) ஊற்றி வேகவைத்து கொடுப்பார்கள்.. தேவையான அளவிற்கு அரிசி சோற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். அந்த சூப்பில் போட்டு சாப்பிட்டுவிட்டு, சூப்பையும் குடித்துவிடலாம்.
மால(ர)தாங்.. ('ர' அடைப்புக்குறிக்குள் அடைபட்டதற்கு காரணம், கொரியனில் ர - ல இரண்டையும் சுட்டும் எழுத்து ஒன்றேதான்..) பெயரிலேயே அதன் விளக்கமும் இருக்கிறது. சமக்கிருத பேய் நம்மை பிடித்து ஆட்டுவது போல, கொரியர்களை பிடித்து வதைப்பது சீன மொழிப்பேய்.. சீன சொல்லான மாலதாங் - மா - நாக்கை மரத்துபோகவைப்பதையும், ல - காரத்தையும், தாங் - சூடான என்பதையும் குறிக்கும்..
சுருக்கமாகச் சொன்னால், "நாக்கை மரக்கவைக்கும், கடுமையான காரமுள்ள, கொதிக்கும் சூடான உணவு"..
(ஆகா.. என்ன ஒரு சீன மொழிப்புலமை.. ஆகாங்.. வாட் ஆர் யூ டாக்கிங் அபோட் மீ...
சீனப்பெயர் காரணம் நல்கி உதவியது என் மAIத்துணன் சாட் ஜிபிடி.. மீன் வைல் - கூகுள் மைண்ட் வாய்ஸ் - நீ பேசுடி மொவனே, அதுல கிரெடிட் தீந்துபோனா எங்கிட்டதான வரணும்.. அப்ப சானிய கரைச்சி மூஞ்சில ஊத்துறேன்..)
இது முற்றிலுமாக ஒரு தனிப்பயனாக்கப்பட்ட உணவு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இதனை அப்படியாக ஏற்கலாம்.. நம்மூரில் இப்படி ஏதும் உண்டா.. உண்டென்றால் கூறுங்கள்.. இல்லையென்றால், அப்படி ஒன்றை முயற்சிக்கலாம்..
பிபிம் பாப் உன்றொரு கொரிய உணவிலும், நமக்கு தேவையான காய்களை போட்டு சோறு வைத்து, சோயா சாஸ், நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறுவார்கள்.. இது நம்மூருக்கு உகந்த உணவு.. ஊருக்கு வந்ததும் உங்களுக்கு செய்துதருகிறேன்..
மற்றபடி அந்த பிபிம் பாப் பெயர் காரணத்தை, நீங்களே உங்கள் மAIத்துணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. நான் கூகுள் அங்கிளிடம் கதைக்கப்போகிறேன்.. எனக்கு என்னைக்குமே கூகுள்தாங்னா..
சகா..

கருத்துகள்
கருத்துரையிடுக