கனாஒளி

ஒரு வயதே வேறுபாடு கொண்ட
அண்ணன்-தங்கை வீடொன்றில்
அண்ணன் பென்ஸ் காரை எடுக்க
தங்கையோ கதவை திறக்கிறாள்
அவ்வண்ணன் தங்கையை நோக்கி
'செக்யூரிட்டி கதவை ஒழுங்காய்
மூடிவிடென' மூக்கடைத்த ஒலியில்
ஒலித்து அக்காரெனப்படுவதின்
பெடலை மூர்க்கமாய் அழுத்தினான்!

கனவென்பது காண்பவருக்கு மட்டுமன்றி
அக்கனா காண்பவரின் மனதை
புரிந்தவருக்கும் காணொளியாய் விரிகிறது
அக்காரை ஓட்டும் அண்ணனின் காட்சி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விளையாட்டாக சொல்கிறேன் #10

விளையாட்டாக சொல்கிறேன் #2