கிராமத்து கதைகள் #1
மார்கழி மாத மூடுபனியின்
கடுங்குளிரினிலே
பயன்படுத்தப்பட்ட உரசாக்குகளின்
கைகோர்ப்பிலுருவான
மெல்லிய திரையினால்
அலங்கரிக்கப்பட்ட
சாணம் மொழுகிய திண்ணையிலே
நெல் மூட்டைகளை கட்டிலாக்கி
நானும் அண்ணன்களும்
நாள்முழுதைய கதையுடன்
உலக வரலாற்றையும்
கூரை வேய்ந்த
மோட்டுவளையிடம்
பகிர்ந்துகொண்டே
உறக்கத்திலாழ்வோம்
பெரியப்பாவின்
உரத்த குரட்டையினூடே!
அனைவரையும்
சற்றும் பாகுபாடின்றி
மயக்கியிருக்கும்
அம்மோட்டுவளை!
இன்று அவ்வினிய நேரம்
வாய்ப்பதில்லை!
அன்று இவ்வினிய ஞாபகம்
நிலைத்திருக்குமென
நினைத்ததில்லை!
#கிராமத்துக்கதைகள்
கருத்துகள்
கருத்துரையிடுக