சாங்வான் குறிப்புகள் #04
When Life Gives You Tangerines, என்ற கொரிய இணைய தொடருக்கு மனதை பறிகொடுத்தோர் பட்டியலில் என் பெயரும் உண்டு.. கதை ஜேஜு என்ற கொரிய தீவு ஒன்றில்தான் தொடங்கும்.. கடலில் மூழ்கி மூச்சுபிடித்து சிப்பிகளை எடுத்துவரும் அம்மா, தன் மகள் எப்படி வளரவேண்டும் என நினைக்கிறாள், மகள் அம்மா நினைத்தபடி எப்படி வளர்கிறாள் என்பதே மொத்த கதையும்.. அம்மா இறந்து, மகள் அம்மாவாகி, பாட்டியாகி, கடைசி காலம் அவளின் கவிதை தொகுப்பு வெளிவரும் வரை நீளும்.. ஜேஜுவில் தொடங்கும் கதை, சியோல்வரை நடந்தே பயணிக்கும் என்றாலும் பயணம் முழுவதும் அவ்வளவு இனிமையானதாக இருக்கும்.. கொரிய தஞ்சை சாங்வானில் இருந்து நாற்பது கிலோமீட்டர் சாலை வழி பயணித்து, ஒரு மணிநேரம் விமானத்தில் பயணித்தால், அந்த ஜேஜு தீவை அடைந்துவிடலாம்.. பல தீவுகள் கொரியாவை சுற்றி இருந்தாலும், ஜேஜுதான் இருப்பதிலேயே பெரிய தீவு.. அதுமட்டுமே சிறப்பென்றில்லை.. அந்த தீவே எரிமலை படிமங்களால் ஆனது என்பது அதன் மிகமுக்கிய சிறப்பு.. குறுக்கும் நெடுக்குமாக சாலை வழியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் பயணிக்க மேலும் சாலையில்லை என்றாலும் ஐந்தாறு நாட்கள், தூக்கமின்றி அலைந்தாலும், அனைத்து ...