இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாங்வான் குறிப்புகள் #03

படம்
  பியான்சன் நோக்கிய பேருந்து பயணம்.. வழியெங்கும் ஆர்ப்பரிப்புடன் கடந்துவந்து இதோ இந்த கழிமுகத்தில் கடலுடன் ஒன்றிப்போய், காணாமல் போகிறது.. இல்லை இல்லை, கடலாக விரிகிறது.. தன் மூதாதைய ஹைட்ரஜனுடனும், ஆக்சிசன்களுடனும் பின்னிப்பிணைந்து நலம் விசாரித்துக்கொள்கின்றன.. கொரியாவின் தஞ்சையான சாங்வானில் இருந்து ஏறத்தாழ முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் , மேற்கு ஓரத்தில் , மஞ்சள் கடற்கரையில்  அமைந்திருக்கிறது இந்த பியான்சன்.. யாலு , ஹான் போன்ற வற்றா நதிகள் கொரிய தீபகற்பத்திலிருந்தும், மஞ்சள் நதி சீன தேசத்திலிருந்தும் இந்த மஞ்சள் கடலில்தான் நட்புகொண்டு நல்லவர்களைப்பற்றிய உரையாடலை நிகழ்த்துகின்றன.. பேருந்து ஆற்றங்கரைகளையும் , பெரும் மலைக்குன்றுகளையும் கடந்து சென்றுகொண்டிருக்க , அசோகமித்திரன் என்னை ஹைதராபாத்திற்கு அழைத்துச்சென்று கிரிக்கெட் விளையாடவும் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தார்.. அந்த 18வது அட்சக்கோட்டில் பயணித்துக்கொண்டே , பேருந்தினுள் அடைபட மறுத்து எதிர் திசையில் பயணப்பட்டவற்றை கண்டு ரசித்துக்கொண்டிருந்தேன்... ஓடிக்கொண்டிருத்த நீர் சத்தமிட்டு, உறக்கத்தில் ஆழ்ந்திருந்த உரைந்த ந...