இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாங்வான் குறிப்புகள்#02

படம்
  வரலாறு காணத அளவிற்கு மழையை கொடுத்துவிட்டாயே மாரியம்மா , என்கிறார்கள்.. அதே வேளை , ‘ அந்த காலத்துலயெல்லாம் எவ்வளவு அடைமழை பெய்யும் தெரியுமா , பக்கத்துல இருக்க ஆளே தெரியாதுன்னா பாத்துக்கயேன்’ , என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்..   அப்படியேதான் கொரிய மாரியம்மனும்.. ஆனால் கொரிய மாரியம்மன் , மழைக்காக தனிக்காலத்தை ஒதுக்கி வைக்கவில்லை.. எல்லா காலங்களிலும் மாதம் மும்மாரி பொழிய வைத்துவிடுவாள்.. அதனால்தான் என்னவோ , இங்கு மாரியம்மனைத் தூக்கி சுமப்பதே இல்லை..   வழக்கத்திற்கு மாறாக , இங்கு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னரே , குளிர் தொடங்குகிறதே , என்று பலரும் கூறுவது வழக்கம்..   கொரியாவில் , குளிர்காலம் , கோடைகாலம் , வசந்த காலம் , இலையுதிர்காலம் என நான்கு காலங்களும் ஒவ்வொரு ஆண்டும் சரியாக வந்துபோகும்..   நவம்பரில் தொடங்கும் குளிர் , டிசம்பர் , ஜனவரி என உச்சம் தொட்டு , பிப்ரவரியில் முடிய வேண்டுமா , மார்ச்சில் முடியவேண்டுமா என்று வட்டமேசை மாநாடு நடத்தி , ஒரு முடிவுக்கு வரும்.. குளிர் முடிந்தால் வசந்தம்தானே... வசந்த காலம் மார்ச் , ஏப்ரல் , மே என சென்று.. ஒருவழியா...