இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாங்வான் குறிப்புகள்#01

படம்
சாங்வான் பல்கலைக்கழகம்.. ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு பின்பு இந்த அழகிய இடத்தின் மேற்கு ஓரத்தில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கும் ஒரு பதினைந்துமாடி கட்டிடத்தின் எட்டாவது மாடியில் நிற்கிறேன்... இது வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கும் தங்குமிடம்.. இங்கிருந்து மேற்கு சன்னல்கள் வழி பார்க்கையில் மொத்த சாங்வான் நகரமும் கண்ணுக்குப் புலப்படும்.. அதே வேளை நீங்கள் காணும் இந்த படம், கிழக்கு திசையில் இருக்கும் சன்னல் வழி எடுக்கப்பட்டது.. மொத்த பல்கலைக்கழகமும் இதில் தெரியும், மரங்களால் மறைக்கப்பட்ட ஒன்றிரண்டு கட்டிடங்களை தவிர்த்து.. இங்கிருந்து எனது ஆய்வகத்திற்கு செல்ல மகிழுந்தில் ஐந்து நிமிடமும், நடந்தால் இருபது நிமிடமும் ஆகும்.. மின்கலன் உதவியுடன் இடம்பெயரும் பல உருளிகளும் உண்டு.. அதற்கு ஆண்டு சந்தா, மாத சந்தா என செலுத்த வேண்டும்.. பெரும்பாலான மாணவர்கள் இந்த உருளிகளையே பயன்படுத்துகின்றனர். நடந்துசெல்வதை அவர்கள் விரும்பாததற்கு காரணம், இந்த தங்கும் விடுதிகள் குன்றின் மேல் அமைத்திருப்பதுதான்.. அதுவன்றி, இந்த உருளிகளை எங்கு வேண்டுமானாலும் நிறுத்திவிட்டு போகலாம்.. மீண்டும் அதை பயன்படுத்த வேண்டுமானால், அ...