இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கனவு...

இது உண்மையாக விந்தையான உலகம்தான்.. பல ஆண்டுகளாக கனவு கண்டு, என்றாவது ஒரு நாள் நமக்கான கனவு இல்லத்தை அமைக்கவேண்டும் என்று நினைத்து மனதிற்குள் வரைந்துவைத்திருக்கும் வீட்டில் பால்கனி ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.. தினமும் வேலை கொடுத்த கலைப்பையோ, பயண அசதியையோ, நண்பர்களுடனான அரட்டையையோ, மனைவி குழந்தைகளுடனான உரையாடலையோ, ஆகச்சிறந்த வாசிப்பு ஒன்றையோ அந்த பால்கனியில் வைத்து செய்துதீர்த்துவிடுவதென, அந்த கனவு பல கிளைகளை பரப்பியிருக்கும்... என்றேனும் அப்படி ஒரு வீட்டை அமைத்துக்கொண்டபின் எவரும் அந்த பால்கனியில் அமர்ந்து நினைத்த எதையாவது ஒன்றை கூட அனுபவித்துவிடுவதில்லை.. இந்த வாழ்க்கைமுறையும் நம்மை அப்படிசெய்ய அவ்வளவு எளிதில் அனுமதித்துவிடுவதில்லை.. இதோ, இந்த சொற்களின் கட்டுமானம் கூட ஒரு பால்கனி பற்றி கனவுகண்டுகொண்டிருக்கும் ஒருவனிடமிருந்து, வாடகை வீட்டு பால்கனியிலிருந்துதான் பிறந்துவருகிறது..  இதேபோலொரு கனவுதான் அன்றும் கூட.. அதுவொரு இதமான தென்றல் வீசும் இரவு, வெயில் காலமென்பதால் திறந்தவெளியில் தூங்குவது சிறந்தது எனப்பட்டது.. என்னதான் கீற்று வேய்ந்த கூரையும், மாட்டுசாணம் மொழுகிய தரையானால...