
மாடு கூறும் நல்லுலகு கெடச்ச புல்ல மேஞ்சிகிட்டு கெடச்ச எடத்துல சாஞ்சிபுட்டு கெடச்சமுட்டும் தண்ணிய குடிச்சுபுட்டு என்னிய முதல்ல புடிச்ச பயலுக்கு வயலுல வேலையும் செஞ்சு கொடுப்பேன் கூலியில்லாம...! இப்ப அவன் என்னிய சொந்தமாக்கி தின்னுவைக்க வைக்கோலுன்னு ஒன்ன கொடுக்குறான்... அதில் ஒர (உரம்) நாத்தம் நல்லா அடிக்குதே தவிர நல்ல உணவு வாசம் கிட்டல.... உண்ணவும் முடியல முக்கி முக்கி முழுங்கினாலும் அசபோடவும் முடியல...! பண்பாடு, கலாச்சாரமெனமுரைக்கும் அதிமேதாவிக இனியாவது ஒரத்த கொட்டி மண்ணையு என்னையு சாகடிக்காது நம்ம குலசாமி நம்மாழ்வார் சொன்னபடி சாகுபடிய இயற்கையா செஞ்சு அந்த வைக்கோல என் தொழுவத்துல கொண்டு சேத்தின்னா .. உனக்கு கோடான,...