இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விளையாட்டாக சொல்கிறேன்#24

புதுப்புது வேடமிட்ட திகதிகளுடன் நேரம் யாருக்காகவும் காத்திருக்க விரும்பாமல் கடந்துகொண்டே போயின, கேள்விகள் மட்டும் எப்பொழுதும் போல, மேப் இல்லா புதையலைப் போல தோண்டும் வரை மனதைவிட்டு வரமாட்டேன் என அடம்பிடித்து அழுந்திப்போய்க் கிடந்தன.. ஒரு பொழுதும் அவனை கல்லூரி கேண்டினில் பார்த்ததில்லை, பதினோறு மணிக்கு அவசரமாய் கடிபடும் சூடான பப்சுடனும் கண்டதில்லை. வேறுபட்டவன்தான், அவன் தனிமை விரும்பி, ஒரு கவிஞனைப் போல, ஒரு புத்தனைப் போல, ஒரு சந்நியாசியைப் போல.. கவிஞன் தனிமையைப் பிழிந்து சொற்களை தேடுவான், நண்பன் வாழ்க்கையைத் தேடினான். புன்னகை பழகாத முகம், மாற்றம்பெறாதா அவனது ஆடைகள், பெயருக்கென ஒரு செருப்பு, தன்னை உடைக்கப்போகிறானோ என அஞ்சி நடுங்கி எழுத்துகளை அவன் எழுதும்பொழுதெல்லாம் பாழாக்கும் அவனது எழுதுகோல், காது அழுக்கை எப்பொழுதுமே சிறிது தாங்கி நிற்கும் அவனது சைக்கிள் சாவி கொத்து, என அவனது அடையாளங்கள் அனைத்துமே ஒரு கவிஞனின் கற்பனைக்கு தீனிபோடவல்ல இயற்கையின் அழகை ஒத்த கருப்பொருட்கள்.  இரண்டாம் ஆண்டு பாதி கடந்திருக்கும், எனக்கேதோ ஒரு திடீர் புத்தி ஒன்று உதித்திருந்தது.. அறிவென்றால் ஆங்கிலம்தானென்ற நம்பிக

விளையாட்டாக சொல்கிறேன்#23

வேளாவேளைக்கு இல்லையென்றாலும், இருவேளை உணவுக்காகவேணும், வேலை கிடைத்ததில் அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அதிலும் சிலநாட்களுக்கு ஒரு வேளை உணவை இழக்க நேரிடலாம், அப்பாவின் மருந்து செலவிற்காக! இருந்தென்ன, ஊதியத்தை தாண்டி ஏதேனும் முதலாளி கொடுத்துவிடமாட்டாரா என்ன? அபரிவிதமான நம்பிக்கை அவனுக்கு, முதலாளியின் மீதல்ல, அவனின் உழைப்பின் மீது. 'என்னடா, விடியிறத்துக்கு முன்னயே எந்திரிஞ்சி போயிடுற, அப்படி என்ன வேலன்னு சொல்லிட்டுதான் போயேன்', அம்மா பலமுறை கேட்டும், அவனிடம் சரியான பதிலில்லை.. அதெல்லாம் நல்லவேலதான், வரேன், என்றவன் பேச்சற்று சாய்வு நாற்காலியில் கிடந்த தன் அப்பாவின் காலின் விழுந்து வணங்கி, புறப்படலானான். என்னதான் உதவாக்கரை, பெற்ற பிள்ளையை வளர்க்க தெரியாதவரென ஊர் சொன்னாலும், அப்பாவாயிற்றே! தான் பெற்ற மகனுக்கு தன்னை பிடிப்பதற்கு, தமக்கு சிறப்பு பண்புகள் எதுவும் வேண்டுமா என்ன!  அப்பாவையும், அம்மாவையும் தவிர, வேறு யார் காலிலும், ஏன் கடவுளின் காலிலும் விழுந்தவனில்லை அந்த சிறுவன். யார் சொன்னது சிறுவனென்று, அந்த பெரிய மனிதன்! சரியாக மூன்றரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்ட அவன், திரும

விளையாட்டாக சொல்கிறேன்#22

பசி பற்றி அறிந்திருக்கிறீர்களா நீங்கள். பசி என்றால் வெறுமனே பசியல்ல முழுமையான பசி, வயிற்றை அப்படியே உள்ளிழுக்கும் பசி. பலருக்கும் பல பசிகள் இருந்திருக்க வாய்ப்புண்டு. அறிவுப்பசியில் தொடங்கி வயிற்றுப்பசி வரையில். பசிகளுக்கெல்லாம் அதிபதி வயிற்றுப்பசிதான். கொடிது கொடிது வயிற்றுப்பசி கொடிது! இந்த பசுமைப்புரட்சி வந்த காலத்திற்கு முன்பு பசி பல உயிர்களை உண்டு செரித்திருந்தது. அதற்கு பின்னும் பசி என்ற ஒன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டதா என்றால், இல்லவே இல்லை! பரவலாக இல்லையென்றாலும், ஈவுஇரக்கமற்ற மக்களால், அந்த நோய் பரப்பப்பட்டுக்கொண்டேதான் இருந்தது. இடையூறுகள் சூழ வாழ்ந்த வேளைகளில் அப்பா பல வயிற்றுப் பசிகளை அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன். அது வெறுமனே விரதப் பசியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பிற்பாடு இடையூறுகள் கடந்தும் வயிற்றுப்பசியை சில குறிப்பிட்ட நாட்களில் விரும்பி ஏற்றிருந்தார், கடவுள்களின் பெயரால். இப்படி யூகித்திப்பாருங்கள், ஒரு பள்ளிப்படிப்பை தொடரும் சிறுவன், அப்பா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கிறார், அம்மாவால் எந்த வேலைகளும் செய்து பணமீட்ட முடியாத நிலைமை, உறவுகளின் கனிவுப் போர்வை

விளையாட்டாக சொல்கிறேன்#21

சத்தம் எங்கிருந்து வருகிறது என்ற மகனின் கேள்வியிலிருந்து ஒளிபெற்றிருந்தது அன்றைய இரவு. சத்தத்திற்கும் காற்றுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு, காற்றை எந்த வழியில் எப்படி அழுத்தி அனுப்புகிறோமோ, அதைப்பொறுத்தே சத்தம் அமையும் என்பதை விளக்க, ஏற்றுக்கொள்பவனாக இல்லை மகன்! நீ பேசுவதே, காற்றை வேறுபட்ட அழுத்தத்தில் வெளிப்படுத்துவதனால்தான் என்றவுடன், அப்படின்னா காத்து இல்லாத வெளியில் சத்தம் இருக்காதா, என்ற அவனின் கேள்வியில் உரைந்து விட்டேன். இவ்வுலகம் தோன்றியதன் காரணம் ஒரு பெருவெடிப்பெனில், அந்த வேளையில் சத்தம் தோன்றியிருக்காதோ என்றொரு கேள்வி எனக்குள் எழுந்துவிட்டது. அடடா, எப்படிப்பட்ட முட்டாள்தனமான விளக்கம் நான் கொடுத்திருக்கிறேன் என்றவாறு, இரு பொருட்கள் உராய்வினால்தான் சத்தம் ஏற்படுகிறது, அது எந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி உராய்வால் உருவான சத்தம் காற்றின் மூலமோ, காற்றில் உள்ள ஈரப்பதத்தின் மூலமோ பயணித்து நம் காதுகளை அடைகிறது, என்றேன்.  அன்னைக்கு ஒருநாளு புயல் அடிச்சிச்சுல ஓஓஓஓன்னு, அந்த சத்தம் எது எதோட உராஞ்சுச்சுனு வந்துச்சி, என்றவனிடம், காற்று உராய்ந்த சத்தமென்ற ஒற்றை பதிலுடன்