இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விளையாட்டாக சொல்கிறேன் #20

வீட்டின் பின்புறத்தில் கீற்றால் வேய்ந்த சாய்ப்பில்தான் நீண்ட நாட்களாக சமையல் நடந்தது. சாய்ப்பின் பின்புறம் குறுக்கு கம்புகள் மீது அடுக்கப்பட்டிருந்தன விறகு கட்டைகள். அருகிலேயே, சிலபல தென்னங்கீற்று ஓலைகள், பன மட்டைகள், மண்ணெண்ணை டப்பா, உமி கிண்ணம், சிம்லி விளக்கு என அனைத்து செயலிகளும் இருந்தன. அவைகள் யாவும் எளிதில் தீயை மூட்டுவதற்காக பயன்பட்டவைகள். ஒரு நாள் இரவு எட்டுமணி வாக்கில், ஒருபுறம் எரிந்துகொண்டே மறுபுறம் அழுதுகொண்டிருந்த உடைத்த சீமகருவேல மரக்கட்டைகள் மீது குளிருக்கு இதமாக அமர்ந்திருந்தது தோசைக்கல். அதன் மீது கம்பும், அரிசியும், உளுந்தும் சேர்த்து மைய அரைத்த மாவை, தொசையாக ஊற்றிக்கொண்டிருந்தார் அம்மா. சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும் அந்த தோசைக்கு பூண்டு துவையலோ, பூண்டு பொடியோதான் சரியான ஜோடியாக இருக்க முடியும். அம்மியில் ஐந்தாறு பூண்டு பற்களையும், நல்லெண்ணெயில் வறுத்த இரண்டு மிளகாயும், உப்பு சிறிதளவு வைத்து அரைக்க தயாராகிவிடும், காரசாரமான பூண்டு துவையல். சண்டைபோட்டு வாங்கிய குழித்தட்டில், தோசையை வைத்து, ஒரு குழியில் பூண்டுதுவையலில் வீட்டு நல்லெண்ணெயை ஊற்றி சாப்பிட, ஒரு ஒன்பது ம