இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விளையாட்டாக சொல்கிறேன் #5

கடந்தகால நினைவுகளை பெரும்பாலும் சேமித்து வைப்பதில் சிறந்தது மணம்தான். நம் மூளையிலிருந்து, வாய்ச்சொற்களாக சட்டென மாற்றம்பெறாத, அதாவது சொல்லமுடியாத பெயர்களை,  'ஆமாங்க நல்ல பேருங்க அது, தொண்டையில இருக்கு, ஆனா வாயில வரமாட்டேங்குது' என்று ஞாபகத்திற்கு வரா பெயர்கள் அனைத்தும் நல்ல பெயர்கள் என்று சொல்வது நமது பொது வழக்கம். அப்படி ஞாபகத்திற்கு வராமல் மூளைக்குள் ஒரு மடிப்பினுள் புதையுண்டு உயிரற்றதுபோல் கிடக்கும், வாழ்க்கையில் நடந்த ஏதோவொரு சுவாரசியமான நிகழ்வை, உயிர்பெறவைக்க நல்ல நறுமணம் போதுமானது.  அப்படி எங்கு எனக்கு விக்கோ பற்பொடியின் மணமோ, மைசூர் சேண்டல் சோப்பின் மணமும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் விளம்பர இடைவெளியில்லாது மாங்குடி கிராமத்தின் படம் ஓடிக்கொண்டே இருக்கும் என் மனதுள். வெறும் புழுதி மணலும், உப்பங்காற்றும் நிறைந்த வெளியினூடே காற்றை உறிஞ்ச பழக்கப்பட்ட என்னுடைய மூக்கிற்கு இதமான ஒரு மணத்தை காண்பித்துக் கொடுத்தது மாங்குடி கிராமம். அந்த ஊர் என்னுடைய இரண்டாவது வீடு என்ற அளவிற்கு பரிச்சயமானது. ஏப்ரல், மே மாதங்களில் அந்த ஊருக்கு அழைத்து போகாவிட்டால் என் மூக்கின் சாபத்திற்கு எங்கள் ஊர்

விளையாட்டாக சொல்கிறேன் #4

பேய்கள் உண்மையில் மனிதர்களைவிட மாண்புமிக்கவர்களாக இருக்கலாம்! ஏனெனில் அவர்களுக்கு மண்ணையும் பொன்னையும் காப்பாற்றவேண்டிய அவசியம் இருக்கபோவதில்லை. கடவுள்கள் கூட போருக்கு காரணமாக இருந்துவிடுகின்றனர், அது சைவ-பௌத்தப் போர், சைவ-சமணப் போர், யூத-கிருத்துவப்போர், கிருத்துவ-இஸ்லாமியப்போர், இந்திய-பாகிஸ்தான் போர் என நீண்டுகொண்டே போகலாம். ஆனால் பேய்களுக்காக போர் யாரும் தொடுத்ததாக வரலாறில்லை. கடவுள்களே ஆகாதவர்களாயினும், அவர்களுடனேயே போரை விரும்பா பேரமைதிக்கு சொந்தக்காரர்கள் பேய்கள்! எனில் மாண்புமிக்கவர் யாராக இருக்கக்கூடும், கடவுளா, பேயா, அல்லது இரண்டையும் படைத்த மனிதனா! பாரா எழுதிய நிலமெல்லாம் ரெத்தம் என்ற புத்தகத்தைப் படித்த பொழுதுகளில் நான் நினைத்ததுண்டு, பேய்கள் உண்மையென்றால் ஏன் கொன்றொழிக்கப்பட்ட அரேபியர்கள், தங்களைக் கொன்ற யூதர்களையும், கிருத்துவர்களையும் அழிக்க பேயாக வரவில்லை என! மூளையின் இன்னொரு மூலையில், 'கடவுள்களை நம்புபவர்கள் பேயாக வரமாட்டார்களோ!' என்ற எண்ணமும் ஓடிக்கொண்டே இருந்தது. அப்படியானால் நான் எப்பொழுது வேண்டுமானாலும் பேயாகிவிடுவேனா! கலக்கம் என்னுள். மதிய நேரத்தில் பேய்

விளையாட்டாக சொல்கிறேன் #3

சிறுவயதில் தொடுவானம் தொட போய், பல முறை தோற்ற வரலாற்றை அம்மா விளையாட்டாய் என்னிடம் பலமுறை பகிர்ந்திருக்கிறார். அவர் சொன்ன பொழுதுகளில் எல்லாம் எனக்கு தோன்றுவது, 'தொடுவானம், பார்வைக்கு தொடும் தூரத்தில்தானே இருக்கிறது ஏன் இவர் ஏமாற்றமடைந்தார்!' என்றுதான். நான் ஒரு நாளும் தொடுவானம் தொட எத்தனித்ததே இல்லை ஆனால் ஒரு ஆவல் மட்டும் என் நெஞ்சில் இருந்தது, வீட்டின் தெற்கில், தென்னடார் (தெற்கில் இருப்பதால்) என்ற ஊரில் இருக்கும் உப்பளத்திற்கு என்றாவது ஒரு நாள் போய் பார்த்துவிடவேண்டும் என்பதே! ஒரு நாள் காலையில் பத்து மணிக்கெல்லாம் விளையாடப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, தெற்கே செல்லத் தொடங்கினேன் நண்பர்களுடன். இரண்டு கிலோமீட்டர் தொலைவு இருக்குமென நண்பன் ஒருவன் சொல்லியதை நம்பி நடக்க தொடங்கினோம். நடக்கும் வழியில் ஒரு சுடுகாட்டை வேறு கடக்க வேண்டுமே என்ற பயமும், எங்கள் கூடவே பயணித்து வந்தது. பயத்தின் பாரம் ஒரு புறம் இருக்க, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணொருவர் இரவு நேரம் இங்கு பாட்டு பாடிக்கொண்டே நடமாடுவதாக நண்பர்கள் சொன்ன கதைகள், அதிகமாய் தண்ணீர்தாகம் எடுக்க வைத்தது. ஒருவழியாய் அதனை க

விளையாட்டாக சொல்கிறேன் #2

நட்பு என்ற சொல்லின் விளக்கமறியாதபொழுதில் கிடைத்த கன்னி நட்புதான் வினோதன். தமிழை காதலிப்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் தமிழையே தன்னை காதலிக்க வைத்துவிடுவார் தன் தமிழ் ஆளுமையால். அதற்கு காரணமும் உண்டு. அந்த காரணம் வேறுயாருமில்லை அவனின் தாத்தா, தமிழ் ஆசிரியர். அவன் தாத்தாவைப்பற்றி சொல்லி உடல் சிலிர்த்துக்கொள்ளும்பொழுதெல்லாம் எனக்கு அப்படியொரு தாத்தா இல்லையே என்றொரு ஏக்கம் ஏற்பட்டதுண்டு. அப்படிப்பட்ட அமுத தமிழின் காதலன், சுற்றத்தாரை நேசிக்கும் அன்பன் சிறிதுகாலம் நட்பு பாராட்டிவிட்டு ஏம்பல் பள்ளிக்கு மாற்றமாகிவிட்டான் என்னை ஏமாற்றிவிட்டு! அன்றைய பொழுதில் என் நண்பர்களாக வாய்த்தவர்களில் முக்கியமானவர்கள் காளி, கணேஷ், அன்பு, அருள், கார்மேகம், உத்ராபதி, ஸ்டாலின், சக்தி. இவர்களில் காளி கணேஷ் இருவர் வீட்டில்தான் என் முழுநாளைய விளையாட்டும்.. பிற்பாடு மற்ற நண்பர்கள் வீட்டிற்கும் செல்லதுவங்கினேன். எந்த வீட்டிற்கு சென்று, அவர்களின் வீட்டுவேலையும் முடிக்காத எந்த நண்பனையும் முழு நேரமாக விளையாட அழைத்துவந்துவிட்டாலும், அவர்களின் பெற்றோர்கள் ஏதும் என்னை கடிந்துகொண்டது கிடையாது. அதற்கு என் குடும்ப பின்னனியு

விளையாட்டாக சொல்கிறேன் #1

பள்ளிப் பருவத்தில் விடுமுறை என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான். என்னுடைய பள்ளிப் பருவத்தில் விடுமுறை விடுவதற்கு ஒரு வாரம் முன்னரே வரைவதற்கு, படிப்பதற்கு என பலவற்றை வாங்கி சேர்த்துவிடுவது வழக்கம். ஆனால் கடைசியில் நினைத்தவற்றை எதுவும் செய்யாது விளையாட்டு, தூக்கம், உணவு என மூன்றால் அடைபட்டுக்கிடக்கும் அந்த விடுமுறை நாட்கள்! தமிழ்நாடு வரைபடத்தில் மூக்கைப்போல் நீண்டிருக்கும் வேதாரண்யம் (மான்காடு) பகுதியில் கடைகோடியில் அமைத்திருக்கும் பஞ்சநதிக்குளம் என்ற கிராமம்தான் எங்கள் ஊர். கிராமம் என்பதால் எதுவும் இருக்காதோ என்று நினைப்பவர்கள் தெரிதுகொள்வதற்காக சொல்கிறேன், அலைபேசி தொடர்பு அலைவரிசையை (டவர்) தவிர அனைத்தும் கிடைக்குமிடமாய் எங்கள் ஊர் இருக்கும். பெரும்பாலான வீடுகளில், வீட்டிற்கொருவர் ஆசிரியராகவும், ஒருவர் வெளிநாட்டிலும் இருப்பார்கள். அதனால் என்னுடைய நண்பர்கள் கைகளில் வெளிநாட்டு எழுதுகோல்களும், சட்டையில் கோடாரி தைல வாசமும் எப்பொழுதும் இருக்கும். எங்கள் கிராமத்து மக்கள் உழைப்பிற்கு பெயர்போனவர்கள். ஆண்டு முழுவதும் ஏதோவொன்றை விளைவித்துக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக நெல், பயறு வகைகள், எள்,